உண்மையை உரக்கச் சொல்வோம்! தொழிலாளர் பற்றாக்குறை விவகாரம்! அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டிய கடப்பாடு அமைச்சர் குலசேகரனுக்கு உண்டு

உண்மையை உரக்கச் சொல்வோம்!

தொழிலாளர் பற்றாக்குறை விவகாரம்!
அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டிய கடப்பாடு அமைச்சர் குலசேகரனுக்கு உண்டு

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மார்ச் 23-
இந்தியர் சார்ந்த பல துறைகளில் நிலவி வரும் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினையை அரசாங்கம் மற்றும் அமைச்சரவையின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டிய கடப்பாடு அமைச்சர் குலசேகலனுக்கு உண்டு என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மனிதவள அமைச்சர் குலசேகரனை தாக்குவது எங்கள் நோக்கமல்ல. மாறாக இந்திய வியாபாரிகள் பல்வேறு துறைகளில்  எதிர்நோக்கும் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எங்கள் இலக்கு என்பதை யாரும் மறந்து விடவேண்டாம்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இந்தியர் சார்ந்த தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினையை அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையை மனிதவள அமைச்சர் குலசேகரன் மேற்கொள்ள வேண்டும். அது அவரது கடமை என்று தேசம் வலைத்தளம் தாங்கள் வெளியிட்ட செய்திக்கு விளக்கமளித்துள்ளது

இந்தியர் வியாபாரிகள் சார்ந்த துறைகளில் நிலவி வரும் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினைக்கு மனிதவள அமைச்சர் குலசேகரனை குறை சொல்வது தவறு என்று சங்கத் தலைவர் ஒருவர் தமிழ் ஊடகம் ஒன்றில் அறிக்கை விட்டிருந்தார். அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அவர் குற்றச்சாட்டு. ஆனால், முதலில் இப்பிரச்சினை நம்பிக்கை கூட்டணி  அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டதா? அப்படி கொண்டு செல்லப்பட்டிருந்தால் ஒவ்வொரு முறையும் நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் பேசப்பட்டு தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும்.

கடந்த 2016இல் தேசிய முன்னனி அரசாங்கத்திடம் முன் வைக்கப்பட்ட தொழிலாளர் பற்றாக்குறை கோரிக்கைக்கு அந்த அரசாங்கம் 2018இல் த 30 ஆயிரம் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கி தீர்வு கண்டதாக அந்தத் தலைவர் கூறியிருந்தார். ஆனால், இப்போதும் அது கிணற்றில் போட்ட கல்லாக இருப்பதாக சொன்னார்.

அந்த 30 ஆயிரம் தொழிலாளர் அனுமதியை செயல்படுத்த வேண்டிய கடப்பாடு யாருக்கு இருக்கிறது? தற்போதைய  ஆட்சி மாற்றத்தில் தேசிய முன்னனி அரசாங்கத்தால் ஒன்றும் செய்ய முடியாது.

இந்தியர்களின் பிரச்சினைகளை தேசிய முன்னனி அரசாங்கம் தீர்க்கவில்லை என்பது பலரது குற்றச்சாட்டு. நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் அதற்கு எளிதில் தீர்வு காணலாமே? இந்த 11 மாதங்களில் இந்நேரம் தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க வேண்டும். இதில் ஒரு உண்மை மட்டும் புலப்படுகிறது.
மனிதவள அமைச்சர் குலசேகரன் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினையை அமைச்சரவையில் அழுத்திப் பேசினால் அவருக்கு பிரச்சினை. அரசாங்கத்திடம் கடுமையாக வற்புறுத்திச் சொன்னால் பதவி பறிபோய்விடும் என்ற பயம். நமக்கென்ன வந்த்து? நடப்பது நடக்கட்டும் என்ற தோரணையில் அமைச்சர் குலசேகரன் சென்று கொண்டிருக்கிறார்.

அமைச்சர் குலசேகரன் இந்திய சமூகத்தின் பிரதிநிதி கிடையாது. அவர் பல்லின கட்சியை சார்ந்தவர் என்றெல்லாம் சிலர் கூறினாலும் இந்தியர் சார்ந்த உணவுத்துறை,  முடி திருத்தும் துறை, ஜவுளித் துறை, மளிகைக் கடை, மினிமார்க்கெட், சில்லறை வியாபாரத் துறை, நகைக் கடை என இந்தியர் சார்ந்த துறைகளில் நிலவிவரும் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய கடப்பாடு மனிதவள அமைச்சர் குலசேகரனுக்கு உண்டு என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.
(மீண்டும் வருவோம்-தேசம்)

Comments