தேசிய முன்னனி தலைவர்களின் ஆணவப் பேச்சு! புதிய கூட்டணி வியூகத்தில் ம.இ.கா, மசீச!

தேசிய முன்னனி தலைவர்களின் ஆணவப் பேச்சு! 
புதிய கூட்டணி வியூகத்தில் ம.இ.கா, மசீச!

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மார்ச் 5-
      அம்னோ தலைவர்களின் ஆணவப் பேச்சின் எதிரொலியாக ம.இ.கா, மசீச இருகட்சிகளும் புதிய கூட்டணியை அமைக்கவிருப்பதாக  அறிவித்துள்ளன.

பல்லீன மக்களின் ஒருமைப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில்  புதிய கூட்டணியை  அமைப்பது குறித்து   ம.இ.கா, மசீச ஆகிய இரண்டு கட்சிகளும் விரைந்து ஆலோசனை நடத்தும் என்று கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.

தேசிய முன்னனி கூட்டணியை முன்னாள் தலைவர்கள் அரும்பாடுபட்டு தோற்றுவித்தனர். ஆனால், இந்நாள் தலைவர்கள் இந்தியர், சீனர்கள் இல்லாவிட்டாலும் அம்னோ தனித்து செயல்பட முடியும் என்று இன ரீதியில் கேவலமாக பேசியுள்ளதால் தாங்கள் புதிய கூட்டணியை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ம.இ.கா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன், மசீச தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் இருவரும் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT ADVERTISEMENT

தேசிய முன்னனி உறுப்புக் கட்சியில் இருந்த 14 கட்சிகளில் 10 கட்சிகள் வெளியேறி விட்டன. இந்நிலையில்  அம்னோ இல்லாத புதிய கூட்டணி அமைப்பதற்கு தேசிய முன்னனி விரைந்து கூட்டம் நடத்த வேண்டும் என்று இரு கட்சித் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

Comments