ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இலக்கு நிறைவேறியது! மாணவர்களின் வீடு தேடிச் செல்லும் யூபிஎஸ்ஆர் மாணவர்களுக்கான இணையதள பதிவேட்டை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள டான்ஸ்ரீ தம்பிராஜா வேண்டுகோள்

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இலக்கு நிறைவேறியது!
மாணவர்களின் வீடு தேடிச் செல்லும்  யூபிஎஸ்ஆர் மாணவர்களுக்கான இணையதள பதிவேட்டை
மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள 
டான்ஸ்ரீ தம்பிராஜா வேண்டுகோள்

குணாளன் மணியம்
படங்கள்:ஜி.முகேஸ்வரன்

கோலாலம்பூர், மார்ச் 25-   மாணவர்கள் கல்வியின் வழி  சிறந்த எதிர்காலத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள  பிரம்மாஸ்தரா இணையதள பதிவேட்டை யூபிஎஸ்ஆர் மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தோற்றுநர் டான்ஸ்ரீ தம்பிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் மாணவர்கள் நலனுக்காக வீடு தேடி சென்றுள்ளது. இங்கு படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் யூபிஎஸ்ஆர் தேர்வுக்கு தயாராகும் பொருட்டு தொடங்கப்பட்டுள்ள இந்த பிரம்மாஸ்தரா இணையதள பதிவேடு ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் நீண்ட கால லட்சியம். அந்த லட்சியம் இன்று நிறைவேறியுள்ளது. இப்போது தன் கடமையை நிறைவேற்றிய மனநிறைவு தனக்கு ஏற்பட்டுள்ளதாக பிரம்மாஸ்தரா அறிமுகவிழாவில் டான்ஸ்ரீ தம்பிராஜா தெரிவித்தார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

நாடு தழுவிய நிலையில் 30 ஆயிரம் பேருக்கு பயன்தரும் இந்த பிரம்மாஸ்தரா இலவச இணையதள பதிவேட்டில் வழங்கப்பட்டுள்ள மாதிரி கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் எழுதி தங்கள் பிழையை திருத்தி தேர்வுக்கு தயாராகலாம்.  இந்த பிரம்மாஸ்தரா இலவச இணையதள பதிவேட்டில் மொத்தம் 2,500 கேள்விகள் பதிவு செய்யப்பட்டுள்ள. இதன்வழி மாணவர்கள்  யூபிஎஸ்ஆர் தேர்வில் சிறந்த தேர்ச்சியைப் பெற முடியும் என்று டான்ஸ்ரீ தம்பிராஜா சொன்னார்.

இந்த பிரம்மாஸ்தரா இலவச இணையதள பதிவேடு வரும் காலங்களில் பிடி3, எஸ்பிஎம் தேர்வுகளுக்கு வழிகாட்டியாக இருக்கும். மார்ச் 24 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணி்தொடங்கி செயல்பட தொடங்கிய  இதில் தேசிய மொழி, ஆங்கிலம், அறிவியல், கணிதம் ஆகிய நான்கு படங்கள் தொடர்பான 2,500 கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் எழுதி யூபிஎஸ்ஆர் தேர்வில் சிறந்த தேர்ச்சியைப் பெற வேண்டும் என்று டான்ஸ்ரீ தம்பிராஜா குறிப்பிட்டார்.

ஸ்ரீ  முருகன் கல்வி நிலையம் வழங்கியுள்ள இந்த வாய்ப்பை  யூபிஎஸ்ஆர் மாணவர்கள் நன்கு பயன்படுத்தி தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற வேண்டும்.

இதில் தமிழ்ப்பள்ளி, ஆரம்ப தேசியப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கலாம். இந்த இணையதள பதிவேட்டில் தேர்வு எழுதி சிறந்த தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் அதே பரிசுகளை தாமும் வழங்கப் போவதாகவும் இவையெல்லாம் மாணவர்கள் கல்வி நலனுக்காக வழங்கப்படுவதாக  டான்ஸ்ரீ தம்பிராஜா குறிப்பிட்டார்.
இணையதள பதிவேட்டிற்கு www..smc.com.my என்ற அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

Comments