இந்திய சமுதாயத்தின் மீதான "குண்டர் கும்பல்" தோற்றம் அகற்றப்பட வேண்டும்! ஹிண்ட்ராப் நடவடிக்கைக்கு மக்கள் கைகோர்க்க வேண்டும் பொன்.வேதமூர்த்தி வேண்டுகோள்

இந்திய சமுதாயத்தின் மீதான "குண்டர் கும்பல்" தோற்றம் அகற்றப்பட வேண்டும்!
ஹிண்ட்ராப் நடவடிக்கைக்கு மக்கள் கைகோர்க்க வேண்டும்
பொன்.வேதமூர்த்தி வேண்டுகோள்

குணாளன் மணியம்

மலாக்கா, மார்ச் 26-
இந்திய சமுதாயம் மீதான "குண்டர் கும்பல்" தோற்றம் அகற்றப்பட வேண்டும். இதற்கு ஹிண்ட்ராப் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு மக்கள் கைகோர்க்க வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய சமுதாய இளைஞர்கள் சிலர்  குண்டர் கும்பல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் ஓட்டு மொத்த இந்திய சமுதாயத்தையே "குண்டர் கும்பல்" என்று முத்திரை குத்தியுள்ளனர்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

ஒரு சிலர் செய்யும் தவற்றினால் ஓட்டு மொத்த சமுதாயத்தையே குண்டர் கும்பல் என்று முத்திரை குத்துவது முறையல்ல என்று மலாக்காவில் நடைபெற்ற இந்திய மக்களுடனான சந்திப்பில் ஹிண்ட்ராப் தலைவருமான வேதமூர்த்தி தெரிவித்தார்.

இந்த "குண்டர் கும்பல்" என்ற தோற்றத்தை அகற்ற ஹிண்ட்ராப் பாடுபடும். ஹிண்ட்ராப்பின் முயற்சிக்கு பலரும் கைகொடுக்க வேண்டும். இந்திய சமுதாய இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாத காரணத்தினாலேயே "குண்டர் கும்பல்" நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இளைஞர்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். இதன்வழி "குண்டர் கும்பல்" தோற்றம் அகல வாய்ப்பு உள்ளது என்றார் வேதமூர்த்தி.

ஒரு காலத்தில் இந்திய சமுதாய இளைஞர்கள் நல்வழியில் சென்றனர். தோட்டப்புறங்களில் இருந்த இளைஞர்களின் நிலை வேறாக இருந்தது. ஆனால், தோட்டத்தில் இருந்து வெளியேறிய இளைஞர்கள் மலிவுவிலை வீடுகளில் குடியேற்றப்பட்டதன் விளைவு அவர்களின் சூழல் பறிக்கப்பட்டது. தோட்டத்தில் கோயில், திருவிழா, விளையாட்டு என்று குடும்பத்துடன் இருந்த இளைஞர்கள் இன்று மாற்று சூழலில் "குண்டர் கும்பல்" நடவடிக்கையில் ஈடுபட்ட நேர்ந்தது. இதற்கு வாய்ப்பின்மையே மூலகாரணம் என்று அமைச்சர் வேதமூர்த்தி சொன்னார்.

இளைஞர்களுக்கான வாய்ப்புகளை அதிகரித்தால் கண்டிப்பாக இந்திய சமுதாயத்தின் "குண்டர் கும்பல்" தோற்றம் மாறும். ஆகையால், இந்திய சமுதாயத்தின் "குண்டர் கும்பல்" முத்திரையை அகற்ற அனைவரும் ஹிண்ட்ராப்புடன் கைகோர்க்க வேண்டும் என்று வேதமூர்த்தி கேட்டுக் கொண்டார்.

Comments