ரத்தத்தில் கிருமி தொற்று! அஸ்தானா ஆர்ட்ஸ் தோற்றுநர் ரவிசங்கர் காலமானார்

ரத்தத்தில் கிருமி தொற்று!
அஸ்தானா ஆர்ட்ஸ் தோற்றுநர் ரவிசங்கர் காலமானார்

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மார்ச் 6-
        ரத்தத்தில் கிருமி தொற்று ஏற்பட்டதன் விளைவாக 35 நாட்கள் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  அஸ்தானா ஆர்ட்ஸ் தோற்றுநர் ஆர்.ரவிசங்கர் நேற்று செவ்வாய்கிழமை இரவு காலமானார்.

அஸ்தானா நடனப் பள்ளியை தோற்றுவித்து திறன் பெற்ற நடனக்  கலைஞர்களை உருவாக்கிய பெருமை கொண்ட ரவிசங்கர் திறன்பெற்ற நடனக் கலைஞர். அவர் தமது நடனத்தின் வழி சமூகத்திற்கு பல நல்ல கருத்துகளை சொல்லி வந்தார்.  அஸ்தானா ஆர்ட்ஸ் நடனப் பள்ளியை  தொடங்கிய காலத்தில் இருந்து நாட்டிய நாடகங்களில் தம்மை ஆழமாக ஈடுபடுத்திக் கொண்டார். பல ஆண்டுகள் அஸ்தானா ஆர்ட்ஸ் நடனப் பள்ளியை  வெற்றிகரமாக நடத்தி வந்த ரவிசங்கர் கடந்த 35 நாட்களாக கோலாலம்பூர் மருத்துவமனையில் ரத்தத்தில் கிருமி தொற்று ஏற்பட்டதன் காரணமாக  சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த 11 நாட்களாக ஆபத்தான நிலையில் சுயநினைவு இல்லாமல் இருந்து வந்த ரவிசங்கர் நேற்று மார்ச் 5 செவ்வாய்க்கிழமை இரவு 11.25 காலமானார். ரவிசங்கர் தாம் குணமாகி வருவேன் என்று நம்பிக்கை கொண்டிருந்ததாகவும் வந்த பிறகு கோவிலுக்கு அழைத்துச் செல்லும்படி தங்கை பவித்ராவிடம் ரவிசங்கர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments