செமினி இடைத்தேர்தல் முடிவு! தேசிய முன்னனி மீதான இந்தியர்கள் கோபம் தணிந்துள்ளது! நம்பிக்கை கூட்டணி மீதான அதிருப்தி அதிகரித்துள்ளது ம.இ.கா தேசிய துணைத் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கருத்து

செமினி இடைத்தேர்தல் முடிவு!
தேசிய முன்னனி மீதான இந்தியர்கள் கோபம் தணிந்துள்ளது!
நம்பிக்கை கூட்டணி மீதான அதிருப்தி அதிகரித்துள்ளது
ம.இ.கா தேசிய துணைத் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கருத்து

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மார்ச் 3-
         செமினி இடைத்தேர்தலில் தேசிய முன்னனி வெற்றி பெற்றுள்ளதானது அதன் மீதான மக்கள் கோபம் தணிந்துள்ளதை காட்டுவதாக ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறியுள்ளார்.

இந்நிலையில் கேமரன் மலை, செமினி இடைத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணி தோல்வியடைந்துள்ளதானது அதன்மீதான மக்களின் அதிருப்தியையும்  அதன் பலவீனத்தையும் காட்டுவதாக தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் தேசம் வலைத்தளத்திடம் தெரிவித்தார்.

ADVERTISEMENT ADVERTISEMENT

கடந்த 14ஆவது பொதுத்தேர்தலில் மக்கள் 61 ஆண்டு கால தேசிய முன்னனி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டாலும்கூட நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின்  10 மாதகால ஆட்சியில் மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கி விட்டனர். நம்பிக்கை கூட்டணி மக்களுக்கு வழங்கிய பல வாக்குறுதிகளை மறக்க மாட்டார். மக்கள் மாற்றத்தை விரும்பியதற்கு காரணம் தங்கள் அன்றாட வாழ்க்கையில் மாற்றம் வேண்டும் என்பதற்காகத்தான். அந்த மாற்றம் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தில் கிடைக்காது என்பதை மக்கள் உணர்ந்து விட்டனர் என்றார் டத்தோஸ்ரீ சரவணன்..

கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் 15 விழுக்காடு இந்தியர்கள் மட்டுமே தேசிய முன்னனிக்கு வாக்களித்தனர். இந்த எண்ணிக்கை தற்போது 45 ஆக உயர்வு கண்டுள்ளது. இதற்கு சான்று கேமரன் மலை, செமினி இடைத்தேர்தல் முடிவு. ஆகையால், தேசிய முன்னனி மீதான மக்கள் கோபம் தணிந்துள்ள நிலையில் நம்பிக்கை கூட்டணி மீதான அதிருப்தி மேலோங்கியுள்ளது என்று டத்தோஸ்ரீ எம்.சரவணன் மேலும்  சொன்னார்.

Comments