ரவாங் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் நலனுக்கு பாடுபடுவேன்! பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தின் புதிய தலைவர் சிங்கம் வாக்குறுதி

ரவாங் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் நலனுக்கு பாடுபடுவேன்!
பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தின் புதிய தலைவர் சிங்கம் வாக்குறுதி

குணாளன் மணியம்

ரவாங், ஏப்ரல் 1-
ரவாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் நலனுக்கும் மேம்பாட்டுக்கும் பாடுபட போவதாக பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தின் புதிய தலைவர் சிங்கம் வாக்குறுதியளித்துள்ளார்.
மாணவர்கள் நலனும் மேம்பாடும் மிகவும் அவசியம். ரவாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக சாதனைகளை படைக்கத் தொடங்கியுள்ளனர்.


இம்முயற்சிக்கு பெற்றோர்-ஆசிரியர் சங்கம் உதவும். மேலும் யூபிஎஸ்ஆர் மாணவர்கள் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேநேரத்தில் பள்ளி மாணவர்கள் நலனில் அக்கறை கொள்வோம் என்று சிங்கம் கூறியுள்ளார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இந்த ஆண்டு கூட்டத்தில் தலைவர் பதவிக்கு திரு.சிங்கம் (93 வாக்குகள்), திரு.குமார் (73 வாக்குகள்), திரு.செல்வம் (32 வாக்குகள்) ஆகிய மூவர் போட்டியிட்டனர்.


இதில் திரு.சிங்கம் வெற்றி பெற்றார். துணைத் தலைவராக திரு.விஜயகுமார் வெற்றி பெற்றார். செயற்குழு உறுப்பினர்களாக திரு.சிவசங்கர், திரு.தாமோதரன், திரு.எல்.முருகன், திரு.செல்வம், திரு.ராஜமாணிக்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


ரவாங் தமிழ்ப்பள்ளி பெற்றோ-ஆசிரியர் சங்கத்தின் ஆண்டு கூட்டம் அண்மையில் பள்ளியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரவாங் ஏசான் ஜெயா தொழிலதிபர் டத்தோ சுரேஷ் ராவ், மேலும் மாவட்ட, மாநில கல்வி அதிகாரிகள், பெற்றோர்கள் என்று 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Comments