பட்டம், பதவிக்கு ஆசைப்பட்டு குறிப்பிட்ட இனத்தை பிரதிநிதிக்கும் கட்சியுடன் கூட்டணி வைக்கும் தலைவர்களையும் கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும் பெஸ்தாரி ஜெயா இந்தியர் கலை, பண்பாட்டு மையத்தின் தலைவர் ஐயப்பன் முனியாண்டி வலியுறுத்து

பட்டம், பதவிக்கு ஆசைப்பட்டு குறிப்பிட்ட இனத்தை பிரதிநிதிக்கும்  கட்சியுடன் கூட்டணி வைக்கும் தலைவர்களையும் கட்சிகளையும் மக்கள்  புறக்கணிக்க வேண்டும்
பெஸ்தாரி ஜெயா இந்தியர் கலை, பண்பாட்டு மையத்தின் தலைவர் ஐயப்பன் முனியாண்டி வலியுறுத்து

        ஆதிரன்

பெஸ்தாரி ஜெயா, மார்ச் 13-
          பட்டம், பதவிக்கு ஆசைப்பட்டு இந்தியர் அல்லாத ஒரு குறிப்பிட்ட இனத்தை பிரதிநிதிக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள நினைக்கு தலைவர்களையும் அக்கட்சியையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பெஸ்தாரி ஜெயா இந்தியர் கலை, பண்பாட்டு மையத்தின் தலைவர் ஐயப்பன் முனியாண்டி வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மக்கள் பல எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கும் நிலையில் சமுதாயமாவது மண்ணாங்கட்டியாவது என்ற நிலையில் பட்டத்திற்கும் பதவிக்கும் முக்கியத்துவம் வழங்கி ஒரு குறிப்பிட்ட இனத்தை பிரதிநிதிக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள சில. கட்சிகளும் தலைவர்களும் அரசியல் ஆதாயம் தேடி வருகிறார்கள். இத்தகைய கட்சிகளும் தலைவர்களும் சமுதாயத்திற்கு தேவையில்லை என்று பெஸ்தாரி ஜெயாவில் நடைபெற்ற  செய்தியாளர் சந்திப்பில் ஐயப்பன் முனியாண்டி தெரிவித்தார்.

ADVERTISEMENT ADVERTISEMENT


ஒரு சில கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடி சூழலுக்கு ஏற்ப முடிவு செய்கின்றனர். சமுதாயம் குறித்து துளியும் கவலைப்படுவதில்லை. ஒரு குறிப்பிட்ட இனத்தை பிரதிநிதிக்கும் இந்தியர் அல்லாத இரு கட்சிகளின் கூட்டணி இந்திய சமுதாயத்திற்கு  பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. கேமரன் மலை, செமினி இடைத்தேர்தல்களில் இந்தியர் ஆதரவு இல்லாமல் வெற்றி பெற்று விட்டதாக மார்தட்டி கூறும்  இக்கட்சிகளின் தலைவர்களா  இந்திய சமுதாயத்தை காக்கப் போகிறார்கள் என்று ஐயப்பன் முனியாண்டி கேள்வி எழுப்பினார்.

இந்தியர் அல்லாத இக்கட்சித் தலைவர்கள் இந்தியர்களை கிள்ளுக் கீரையாக நினைத்து விட்டனர். இந்தியர்கள் ஓட்டு இல்லாமலா கேமரன் மலை, செமினி இடைத்தேர்தல்களில் சம்பந்தப்பட்ட கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள்? இந்த கட்சிகளின் கூட்டணி தமிழ்ப்பள்ளி, ஆலயங்களுக்கு பாதிப்பு வராது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்பது தெரியவில்லை என்றார் ஐயப்பன் முனியாண்டி.

இந்தியர், சீனர் ஆதரவு தேவையில்லை என்று பகிரங்கமாக கூறியுள்ள அந்த கட்சியை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இந்தியர் ஓட்டு ஒரு வேட்பாளரின் வெற்றியை நிர்ணயிக்கக்கூடியது என்பதை ரந்தாவ் இடைத்தேர்தலில் இந்திய வாக்காளர்கள் நிர்ணயிக்க வேண்டும். இந்நாட்டில் சிறுபான்மை இனமான இந்தியர்பளும் சக்தி படைத்தவர்கள் என்பதை காட்ட வேண்டும். சமுதாயத்தை அணைக்கும் தலைவர்களை அரவணைக்க வேண்டும். பட்டம், பதவிக்கு  முக்கியத்துவம் வழங்கும் தலைவர்களை அடியோடு களையெடுக்க வேண்டும். ஆகையால், ரந்தாவ் இடைத்தேர்தலில் இந்திய வாக்காளர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று ஐயப்பன்   முனியாண்டி கேட்டுக் கொண்டார்.

Comments