எம்.ஜி.ஆரின் நற்பண்புகள் இன்றைய தலைமுறைக்கு நல்படிப்பினை எம்.ஜி.குமார் புகழாரம்

எம்.ஜி.ஆரின் நற்பண்புகள் இன்றைய தலைமுறைக்கு நல்படிப்பினை
எம்.ஜி.குமார் புகழாரம்

மு.வ.கலைமணி


புக்கிட் மெர்தாஜாம், மார்ச், 23-
தமிழ் திரைப்பட  உலகில்  புரட்சி நடிகராக  திகழ்ந்து, மக்கள் திலகமாக வளர்ந்து,  தமிழ் நாட்டின் முதலமைச்சராக,  உலகம் போற்றும் மாபெரும் தலைவராக, மறைந்தும் மறையாத சந்திரனாக  திகழ்ந்து வரும் எம்.ஜி.ஆர்  புகழ் என்றும்  மறையாது என்று பினாங்கு மாநில ஆயிரத்தில் ஒருவன் இதயக்கனி  எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் தலைவர் எம்.ஜி.குமார் கூறினார்.
பினாங்கு மாநிலத்தில் எம்.ஜி.ஆர் அருங்காட்சியகம் இல்லாத குறையை போக்கும் வண்ணம், புக்கிட் மெர்தாஜாம் நகரில் பிரமாண்டமான எம்.ஜி.ஆர் அருங்காட்சியகம் ஒன்றை நடத்துவதோடு சுமார் 57 மாணவர்களுக்கு இலவச கல்வி மற்றும் கணினி வகுப்புகள்  நடத்தி வரும் குமார்  இச்சேவையில் பல ஆண்டுகளாக பீடுநடை போட்டு வருவதாகவும் வகுப்பில் கலந்து கொள்ளும்  மாணவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி  வருவதாகவும் பெருமையுடன் தெரிவித்தார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

மக்கள் திலகத்தின் திரைப்பட துறை வளர்ச்சிக்கு பின்னால் இருந்து செயல்பட்டவர்களில் பலர் இருந்துள்ளனர் என்றாலும் கவியரசு கண்ணதாசனும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் முதலிடம் பெற்றவர்களாவர். அவ்விருவரின் மகன்களான அண்ணாதுரை கண்ணதாசன், குமரவேல் பட்டுக்கோட்டையார் இருவரும் சிறப்பு வருகை தந்து எம்.ஜி.ஆரின் அருங்காட்சியகத்தை பார்வையிட்டு மகிழ்ந்ததோடு, தமிழ் நாட்டு அருங்காட்சியகத்தில் கூட இல்லாத,  காணக்கிடைக்காத பல அற்புத  புகைப்படங்களை சேகரித்து வைத்துள்ளதை கண்டு வியந்து  பாராட்டியதாக அவர் சொன்னார்.

பிரமுகர்கள் இருவரும் உணர்வுப்பூர்வமான பல நிகழ்வுகளை நினைவுக் கூர்ந்து வருகையாளர் முன்னிலையில் பகிர்ந்து கொண்டனர்.
தனது மன்றத்தினர்
எம்.ஜி.ஆரின் கொள்கைகளை கடைப்பிடித்து வருவதுடன், அவரது தொண்டுள்ள அடிப்படையில் அவரால் மேற்கொள்ளப்பட்ட பல நல்ல திட்டங்களான கல்வி போதித்தல், கல்வி நிதி வழங்குதல்,   உணவு வழங்குதல்,  மற்றும் வசதியற்றவர்களுக்கு உதவிடும் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.

இன்னும் பல திட்டங்களை மேற்கொள்ள வேண்டும், அதன் மூலம் எம்.ஜி.ஆரின்  புகழ் பரப்பப் பட வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டுள்ள அவர்,
இம்மாநிலத்தில் பிரபலமான ஓர் இயக்கமாக தனது இயக்கம் மிளிர்வதாக சொன்னார்.

தனது உழைப்பின் வழி கிடைக்கப்பெறும் வருவாயின் மூலம் இத்தகைய நிகழ்வுகளை நடத்தி வருவதாகவும், தனது மன்றத்தினர் உறுதுணையாக இருந்து வருவது தனது பலமாகும் என எம்.ஜி.குமார் கூறினார்.

Comments