தேசம் சாதனையாளர் விருது பெற்றவர்! ரவிசங்கர் மறைவு கலை உலகத்திற்கு பேரிழப்பு! தேசம் குணாளன் மணியம் இரங்கல்

தேசம் சாதனையாளர் விருது பெற்றவர்!
ரவிசங்கர் மறைவு கலை உலகத்திற்கு பேரிழப்பு!
தேசம் குணாளன் மணியம் இரங்கல்

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மார்ச் 6-
        தேசம் சாதனையாளர் விருது விழாவில் சாதனை விருது பெற்ற அஸ்தானா ஆர்ட்ஸ் தோற்றுநர் ஆர்.ரவிசங்கர் திடீர் மறைவு மலேசிய கலை உலகிற்கு பேரிழப்பாகும் என்று தேசம் ஊடகத் தோற்றுநர் குணாளன் மணியம் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ரவிசங்கர் நல்ல திறன்பெற்ற கலைஞர். டிஎச்ஆர் ராகா வானொலி நிறுவனத்தில் பணியாற்றி அங்கிருந்து விலகி அஸ்தானா ஆர்ட்ஸ் நடனக் கலை மன்றத்தை தொடங்கி பீடுநடை போட்டு வந்தவர்.

பல ஆண்டுகள் அஸ்தானா ஆர்ட்ஸ் கலைமன்றத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த ரவிசங்கரின் திறன் கண்டு 2017இல் நடைபெற்ற தேசம் சாதனையாளர் விருது விழாவில் "சிறந்த நடன  சாதனையாளர்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இவரது மறைவு ஈடு செய்ய முடியாத ஒன்று என்று குணாளன் தெரிவித்தார்.

கடந்த 35 நாட்களாக கோலாலம்பூர் மருத்துவமனையில் ரத்தத்தில் கிருமி ஏற்பட்டதன் காரணமாக  சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 11 நாட்களாக ஆபத்தான நிலையில் சுயநினைவு இல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் மார்ச் 5 செவ்வாய்க்கிழமை இரவு 11.25 அவரது உயிர் பிரிந்தது. "நான்  குணமாகி வந்த பிறகு கோவிலுக்கு அழைத்துச் செல்லும்படி தங்கை பவித்ராவிடம் ரவிசங்கர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments