உலுசிலாங்கூர் ராசாவில் இந்திய குடும்பம் பரிதவிப்பு!ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வேண்டுகோள்படி உடனடி உதவி வழங்கியது தொகுதி காங்கிரஸ்

உலுசிலாங்கூர் ராசாவில் இந்திய குடும்பம் பரிதவிப்பு!ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வேண்டுகோள்படி 
உடனடி உதவி வழங்கியது தொகுதி காங்கிரஸ்

குணாளன் மணியம்

உலுசிலாங்கூர், மார்ச் 19-
உலுசிலாங்கூர்,  ராசாவில்  இந்திய குடும்பம் ஒன்று பரிதவித்து வருவதாக அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண் வெளியிட்ட கண்ணீர்  காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து அந்த குடும்பத்திற்கும் தேவையான உதவிகளை உடனடியாக வழங்கும்படி ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்  தொகுதி காங்கிரஸ் தலைவரைக் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து தலைவர் பாலசுந்தரம் உடனடி தேவைக்கு 1,200 வெள்ளி வழங்கினார்.

ம.இ.கா தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க உலுசிலாங்கூர் தொகுதி காங்கிரஸ் சார்பில் உடனடி உதவி செய்தோம். அந்த பிள்ளைகளுக்கு சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அதுகுறித்து  அவர்கள் முடிவு செய்த பிறகு மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்று  தொகுதித்  தலைவர்  பாலசுந்தரம் தெரிவித்தார்.

உலுசிலாங்கூர், ராசா, தாமான் ராசா உத்தமாவைச் சேர்ந்த அந்த குடும்பம் வறுமையில் வாடிவந்த நிலையில் மூன்று பிள்ளைகளுக்கு தாயான அந்த
குடும்பமாது கடந்த
மாதம் பேரங்காடி
ஒன்றில் தனது குழந்தைகளுக்கு உணவு சமைத்து கொடுக்க வேண்டி கோழி உள்ளிட்ட
உணவுப்பொருட்களை
திருடிய குற்றச்சாட்டின்
பேரில் போலீசாரால் கைது செய்யப்பட்டு காஜாங் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT ADVERTISEMENT

இதனால் சாப்பாட்டிக்கே தவித்து அந்த குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது பெண் கண்ணீர் காணொளி வெளியிட்டார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதில்  கைது செய்யப்பட்ட தனது தாயார் நிலை குறித்து
எந்த தகவலும் இல்லை என்றும் தங்கள் பட்டினியை போக்கவே தாயார் அந்த உணவுப் பொருட்களை திருடியதாகவும் அந்த காணொளியில் ராஜேஸ்வரி கண்ணீருடன் தெரிவித்திருந்தார்.

 இந்த தகவலை அறிந்த
ம.இ.கா தேசியத் தலைவரும் மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ
எஸ் .ஏ. விக்னேஸ்வரன் அந்த குடும்பத்திற்கு உடனடி உதவி வழங்குவதோடு
அது குறித்த தகவல்
அறிந்து வர தொகுதித் தலைவர்
பாலசுந்தரத்தை கேட்டுக் கொண்டிருந்தார். தாயை
பிரிந்திருக்கும் அக்குழந்தைகளுக்கு
உடனடி உதவிகளை வழங்குமாறு
கேட்டுக் கொண்டிருந்தார்.
உலுசிலாங்கூர்
ம.இ.கா தொகுதித் தலைவர் பாலா அக்குடும்பத்திற்கு தேவையான உதவிகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments