பெற்றோர் சொல்லி படிப்பதில் ! மாணவர்கள் எதிர்கால நலனுக்காக சுயமாக கல்வி பயில வேண்டும் ஸ்ரீ முருகன் நிலைய இயக்குநர் பிரகாஷ் ராவ் வலியுறுத்தல்

பெற்றோர் சொல்லி படிப்பதில் !
மாணவர்கள் எதிர்கால நலனுக்காக சுயமாக கல்வி பயில வேண்டும்
ஸ்ரீ முருகன் நிலைய இயக்குநர் பிரகாஷ் ராவ் வலியுறுத்தல்

குணாளன் மணியம்
படங்கள்: ஜி.முகேஸ்வரன்

கோலாலம்பூர், மார்ச் 26-
பெற்றோர்கள் சொல்லி படிக்காமல் சுயமாக எதிர்கால நலனுக்காக படிக்கும் மாணவர்களே கல்வியில் வெற்றி பெற முடியும் என்று ஸ்ரீ முருகன் நிலைய இயக்குநர் பிரகாஷ் ராவ் வலியுறுத்தியுள்ளார்.

 பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் பிள்ளைகளை எப்போதும் பபடி படி என்று சொல்லி கொண்டிருப்பதை பல குடும்பங்களில் நாம் பரவலாக காண முடிகிறது. இப்படி பெற்றோர் படிக்கும் மாணவர்கள் கண்டிப்பாக கல்வியில் வெற்றி பெற முடியாது.

 மாறாக எதிர்கால நலனுக்காக சுயமாக படிக்கும் மாணவர்களே கல்வியில் மட்டுமன்றி வாழ்க்கையிலும் வெற்றி பெற முடியும் என்று பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் பிரம்மாஸ்தரா இலவச இணையதள அறிமுகவிழாவில் பிரகாஷ் ராவ் கூறினார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

மாணவர்கள் அனைவரும் தங்களுக்காக படிக்க வேண்டும். பெற்றோர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக படிக்கக் கூடாது. அதில் எந்தப் பயனும் இல்லை. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் வாழ்கை நல்லதாக அமைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் பல தியாகங்களை மேற்கொண்டு வருகிறார்கள். ஆகையால், மாணவர்கள் இதை உணர்ந்து படிக்க வேண்டும் என்று பிரகாஷ் ராவ் கேட்டுக் கொண்டார்.


ஸ்ரீ முருகன் நிலைய மாணவர்கள் பலர் எஸ்பிஎம் தேர்வில் 9ஏ,10ஏ, 11ஏ என்றும் எஸ்டிபிஎம் தேர்வில் 4ஏ, 5ஏ என்று சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இதனை முன்னுதாரணமாக்க் கொண்டு யூபிஎஸ்ஆர் மாணவர்கள் தங்களுக்காக படித்து குடும்பத்திற்கும் வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். ஆகையால், மாணவர்களின் வீடு தேடி வந்திருக்கும் யூபிஎஸ்ஆர் மாணவர்களுக்கான இணையதள பதிவேட்டை
மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள  வேண்டும் என்றார் பிரகாஷ் ராவ்.


இந்திய மாணவர்கள்  கல்வியின் வழி  சிறந்த எதிர்காலத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற இலக்கில் ஸ்ரீ முருகன் நிலையம்
பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முத்தாய்ப்பாக அனைத்து இந்திய யூபிஎஸ்ஆர் மாணவர்களும் பயன்பெறும் வகையில்  உருவாக்கப்பட்டுள்ள  பிரம்மாஸ்தரா இணையதள பதிவேட்டை யூபிஎஸ்ஆர் மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


மாணவர்கள் நலனுக்காக வீடு தேடி சென்றுள்ள இங்கு படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் இந்த பிரம்மாஸ்தரா இணையதள பதிவேட்டை நன்கு பயன்படுத்தி யூபிஎஸ்ஆர் தேர்வில் ஏ நிலை தேர்ச்சியைப் பெற வேண்டும் என்று பிரகாஷ் ராவ் குறிப்பிட்டுள்ளார்.


இணையதள பதிவேட்டிற்கு www..smc.com.my என்ற அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

Comments