மலிவு விலை அடுக்கு மாடி வீடுகளில் குடியேறியுள்ள தோட்டப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த ஹிண்ட்ராப் முயலும்! அமைச்சர் பொன்.வேதமூர்த்தி நம்பிக்கை

மலிவு விலை அடுக்கு மாடி வீடுகளில் குடியேறியுள்ள தோட்டப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த ஹிண்ட்ராப் முயலும்!
அமைச்சர் பொன்.வேதமூர்த்தி நம்பிக்கை

குணாளன் மணியம்

மலாக்கா, மார்ச் 26- தோட்டப்புறங்களில் இருந்து மலிவுவிலை அடுக்குமாடி வீடுகளில் குடியேற்றப்பட்டதால் சூழல் காரணமாக சமூகப் பிரச்சினைகள் உட்பட பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண ஹிண்ட்ராப் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


தோட்டத் தொழிலாளர்கள் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டு மலிவு விலை அடுக்குமாடி வீடுகளில்  குடியேற்றப்பட்டதன் விளைவாக அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை அனுபவிக்க  நேர்ந்துள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

ஒரு காலத்தில் தோட்டப்பறங்களில் வாழ்ந்து வந்த இந்திய மக்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். தோட்டப்புறங்களில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பல வழிகள் இருந்தன. சாப்பிட உணவுப் பொருட்கள் இல்லாவிட்டாலும் கொல்லைப்புறத்தில் அவர்கள் பயிரிட்டிருந்த காய்கறிகளைக் கொண்டு சமையல் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்த காலம் போய் இன்று பிளாட்டுகளில் குடியேற்றப்பட்டு அவர்கள் சமூகப் பிரச்சினைகளில் சிக்கித் தவித்து வருவதாக மலாக்கா மக்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் ஹிண்ட்ராப் இயக்கத்தின் தலைவருமான வேதமூர்த்தி தெரிவித்தார்.


தோட்டப்புறங்களில் குடியிறுந்து வந்த இந்திய மக்கள் அங்கிருந்து மலிவு விலை அடுக்குமாடி வீடுகளில் குடியேற்றப்பட்டதால் அவர்கள் பல பிரச்சினைகளை அனுபவிக்க நேர்ந்து வருகிறது. அடுக்குமாடி வீடுகளில் உள்ள சூழல் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவில்லை. மாறாக பல பிரச்சினைகளுக்கு வித்திட்டுள்ளது. இந்த சூழலை மாற்றியமைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஹிண்ட்ராப் அமைக்கப்பட்டதாக வேதமூர்த்தி சொன்னார்.

இந்நாட்டில் அடித்தட்டு இந்திய  மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதேநேரத்தில் இத்தகைய மக்களின்  சமூகப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும். நான் மட்டும் தனி ஆளாக இருந்து மேற்கண்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. மாறாக மக்கள் ஆதரவில் தோட்டப்புற மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முடியும் என்று அமைச்சர் பொன்.வேதமூர்த்தி நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த மக்கள் சந்திப்பு நிகழ்வை மலாக்கா மாநில அரசு சாரா இயக்கத் தலைவர் டத்தோ ரகு ஏற்பாடு செய்திருந்தார். இதில் கிள்ளான் குளோ ஆசியா கல்லூரி தலைவர் ஐயப்பன் முனியாண்டி, மலாக்கா மாநில தொழிலதிபர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இயக்கத் தலைவர்கள் மற்றும் அழைக்கப்பட்டவர்கள் என்று சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.

Comments