பாஸ் கட்சியினால் இந்து சமயத்திற்கும் இந்தியர்களுக்கும் பிரச்சினை எழாது! டத்தோஸ்ரீ ஹாஜி அவாங் உறுதியளித்ததாக டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் தகவல்

பாஸ் கட்சியினால் இந்து சமயத்திற்கும்   இந்தியர்களுக்கும் பிரச்சினை எழாது!
டத்தோஸ்ரீ ஹாஜி அவாங் உறுதியளித்ததாக டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் தகவல்

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மார்ச் 29-
பாஸ் கட்சி இஸ்லாம் மத ரீதியிலான கட்சியாக இருந்தாலும் இந்து மதத்தை சார்ந்த இந்தியர்களுக்கு பிரச்சினை வராது என்று ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் கூறினார்.

பாஸ் கட்சி கிளந்தான், திரெங்கான் மாநிலங்களில் இதுவரை எந்த ஆலயத்தையும் உடைத்ததில்லை. பாஸ் கட்சி இவ்விரு மாநிலங்களையும் பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் நிலையில் ஆலயங்கள், புத்தர் ஆலயம், சீனர் கோயில்கள் உடைபட்டதில்லை. மாறாக பெரிய புத்தர் சிலை கிளந்தான் மாநிலத்தில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

ஆகையால், இந்து சமயத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று டத்தோஸ்ரீ ஹாஜி ஹடி அவாங் தம்மிடம் கூறியதாக ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

கிளந்தான், திரெங்கானு ஆகிய இரு மாநிலங்களில் மத்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் மத சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஆகையால், பாஸ் கட்சியுடனான கூட்டணி ம.இ.காவின் எதிர்காலத்திற்கு ஒரு உந்து சக்தியாக விளங்கும் என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.

Comments