மக்களிடையே இனவாதத்தை தூண்டி ஆட்சி செய்வது அழகல்ல! லிம் குவான் எங். நடவடிக்கைக்கு ம.இ.கா இளைஞர் பிரிவுத் தலைவர் தினாளன் ராஜகோபாலு கண்டனம்

மக்களிடையே இனவாதத்தை தூண்டி ஆட்சி செய்வது அழகல்ல!
லிம் குவான் எங். நடவடிக்கைக்கு ம.இ.கா இளைஞர் பிரிவுத் தலைவர் தினாளன் ராஜகோபாலு கண்டனம்

கோலாலம்பூர், மார்ச் 8-
           இந்நாட்டில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் பல்லீன மக்களிடையே இனவாதத்தை தூண்டி ஆட்சி செய்வது அழகல்ல என்று நிதியமைச்சர்
லிம் குவான் எங். நடவடிக்கைக்கு ம.இ.கா இளைஞர் பிரிவுத் தலைவர் தினாளன் ராஜகோபாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அம்னோ-பாஸ் கட்சி இணைந்து செயல்படும் என்று அறிவிப்ப வெளிவந்த பிறகு லிம் குவான் எங் இனவாத  அறிக்கை வெளியிட்டுள்ளார். "மலேசியாவில் இஸ்லாம் அல்லாதவர் மீது போர் தொடுக்கப்படுகிறது" என்ற இனவாத அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதௌ இனவாதப் பேச்சாகும். ஆகையால், லிம் குவான் எங்கை தேச நிந்தனை சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட வேண்டும் என்று தினாளன் தெரிவித்தார்.

ADVERTISEMENT ADVERTISEMENT

ஜசெக அமைச்சரான லிம் குவான் கடந்த 2004இல் தேச நிந்தனை சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனையை அனுபவித்தவர். இப்போது மீண்டும் அதே தவற்றை செய்கிறார். கடந்த மார்ச் 6இல் வெளியிட்ட அறிக்கையில் இனவாதப் போக்கில் பேசியிருக்கிறார். அதுவும் ம.இ.கா, மசீச ஆகிய இருகட்சிகள் அடங்கியிருக்கும் தேசிய முன்னனியில் அம்னோ-பாஸ் கூட்டணியினால் ஆட்சி கவிழ்ந்துவிடும், பதவி பறிபோய்விடும் என்ற பயத்தில் லிம் குவான் எங் இனவாத அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

பாஸ் கட்சி கிளந்தான் மாநிலத்தை 28 ஆண்டுகள் ஆட்சி செய்த நிலையில் பிற இனத்தவர்களை கைவிட்டதில்லை. கிளந்தானில் மத சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஆலயம், சீனர் கோயில் கட்டித்தரப்பட்டுள்ளது. ஆனால், புதிய அரசாங்கம் ஒரே மலேசியா சுலோகத்தை பயன்படுத்தத் தடை விதித்துள்ளது. கட்சிக்காகவும் அரசியல் நோக்கத்திற்காகவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. லிம் குவான் தேசிய கோட்பாட்டை மறந்து விட்டார். மலேசியாவில் மூவின மக்களை ஒன்றிணைக்க வேண்டுமே தவிர இனவாத த்தை தூண்டிவிடுவதோ, ஒரு குறிப்பிட்ட இனத்தை ஒதுக்குவதோ கூடாது. ஆகையால், லிம் குவாங் நடவடிக்கையை ம.இ.கா வன்மையாக கண்டிப்பதாக தினாளன் ராஜகோபாலு குறிப்பிட்டார்.

Comments