இந்திய சமுதாயத்தின் தாய் கட்சியான ம.இ.கா ஒரு ஆலமரம்! அதை யாராலும் அழித்துவிட முடியாது அடுத்த தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டே இருப்போம்!

இந்திய சமுதாயத்தின் தாய் கட்சியான ம.இ.கா ஒரு ஆலமரம்! 
அதை யாராலும் அழித்துவிட முடியாது
அடுத்த தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டே இருப்போம்!

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மார்ச் 29-
இந்திய சமுதாயத்தின் தாய்க் கட்சியான ம.இ.கா ஒரு ஆலமரம். அதை யாராலும் எளிதில் அழித்துவிட  முடியாது என்று ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ.விக்னேஷ்வரன் சூளுரைத்துள்ளார்.


ம.இ.கா இந்திய சமுதாய நலனுக்காக பல நடவடிக்கைகளை கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும்  சில காரணங்களால் மக்கள் ம.இ.காவை புறக்கணித்ததால் கடந்த தேர்தலில் ம.இ.கா தோல்வியடைய நேர்ந்துள்ளது. இந்நிலையில் எனது தலைமைத்துவத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறேன். அதில் முக்கியமான வியூகம்தான் பாஸ் கட்சியுடனான கூட்டணி என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் தெளிவுபடுத்தினார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

ம.இ.கா மூழ்கிவிடவில்லை. கடந்த காலங்களில் மூழ்கும் நிலை ஏற்பட்டிருந்தது.  ஆனால், நான் அதனை தடுத்து நிறுத்தி விட்டேன். இப்போதைய ம.இ.காவை வலுப்படுத்துவதே எங்கள் நோக்கமாகும் என்றார் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன்.


பாஸ் கட்சியுடன் ம.இ.கா கொண்டுள்ள கூட்டணி குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசுவது குறித்து எங்களுக்கு கவலையில்லை. ம.இ.காவை வலுப்படுத்தி மக்கள் நம்பிக்கையைப் பெற்று அடுத்த தேர்தலில் தோல்வியடைந்த தொகுதிகளை மீட்போம் என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் சொன்னார்.


கேமரன் மலை, செமினி போன்று ரந்தாவ் தொகுதியையும் மீட்டெடுப்போம். இதற்காக ம.இ.கா பாடுபடும். நாங்கள் எங்கள் போக்கில் சென்று கொண்டிருக்கிறோம். எங்களை வம்புக்கு இழுக்க வேண்டாம். மக்கள் கூட்டணியில் இருக்கும் நான்கு அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மக்களை பார்த்துக் கொள்வார்கள். நாங்கள் எங்கள் உறுப்பினர்களை பார்த்துக் கொள்கிறோம். யாரும் எங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் அறிவுறுத்தினார்.

Comments