பூர்வ ஜென்ம கர்மாவினால் ஏற்படும் துன்பங்களை சூட்சம வழியில் தீர்வு காண முடியும்! சித்தர் வழி ஜோதிடர் எச்.ரக்‌ஷிதா உறுதி

பூர்வ ஜென்ம கர்மாவினால் ஏற்படும் துன்பங்களை சூட்சம வழியில் தீர்வு காண முடியும்!
சித்தர் வழி ஜோதிடர் எச்.ரக்‌ஷிதா உறுதி

குணாளன் மணியம்


கோலாலம்பூர், மார்ச் 19-
பூர்வ ஜென்ம கர்மாவினால் ஏற்படும் துன்பங்களை சூட்சம வழியில் தீர்வு காண முடியும் என்று சித்தர் வழி ஜோதிடர் எச்.ரக்‌ஷிதா கூறியுள்ளார்.


வினைப் பயன்களை அனுபவிக்கவே நாம் இந்த ஜென்மம் எடுத்திருக்கிறோம். பூர்வ ஜென்ம பாவங்களினால் இந்த ஜென்மத்தில் நாம் மனரீதியிலும் உடல் ரீதியிலும் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறோம்.

இந்த துன்பங்களுக்கு விடிவுகாலம் இல்லையா என்று பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். இத்தகைய பிரச்சினைகளுக்கு சூட்சம பரிகாரத்தின் வழி தீர்வு காண முடியும் என்கிறார் தமிழ்நாடு, சேலம் நகரைச் சேர்ந்த சித்தர் வழி ஜோதிடரான திருமதி ரக்‌ஷிதா.


கடந்த 1999இல் இருந்து ஜோதிடத்தில் ஈடுபாடு கொண்டு மக்களுக்கு நல்ல பலன்கள் சொல்லி வரும் திருமதி ரக்‌ஷிதா 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிடத்தில்  சித்தர் வழி மருத்துவத்தை இணைத்து பலன்கள் சொல்ல முயற்சித்தார். ஜோதிடத்தில் சொல்லப்படும் உடல் துன்பங்களை சித்தர் மருத்துவத்தின் வழி தீர்வு காண்பது எப்படி என்பது குறித்து ஆராய்ந்து வந்தார்.

ADVERTISEMENT ADVERTISEMENT

இந்நிலையில் ஆலயம் ஒன்றுக்கு சென்றிருந்த போது ஒரு முதியவர் இவரிடம் வந்து குறிப்பு புத்தகங்கள் வழங்கியுள்ளார். அந்த புத்தகத்தில் ஓலைச் சுவடியில் சித்தர்கள் எழுதிய மருத்துவ குறிப்புகள் இருப்பதாகவும் இதனை அதிகாலை 4.00 மணி தொடங்கி 6.00 மணிவரையில் படிக்கும்படியும் அறிவுறுத்தினார்.

அதன் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும் என்று கூறிச் சென்றார் அந்த முதியவர். அந்த புத்தகத்தை முழுமையாக 10 நாட்கள் வரையில் படித்து முடித்த பிறகே சித்தர் வழி ஜோதிட மருத்துவத்தை மேற்கொண்டதாகவும் இது போகர் சித்தரின் வாக்கு என்ற நம்பிக்கையில் கடந்த 5 ஆண்டுகளாக இதனை செயல்படுத்தி வருவதாகவும் ரக்‌ஷிதா தெரிவித்தார்.

இந்த ஜென்மத்தில் ஏற்படும் எல்லா பிரச்சினைகளுக்கும் சூட்சம வழியில் தீர்வு உண்டு. எனது குரு போகர் சித்தர். இது குறித்து சித்தர்கள் ஓலைச் சுவடியில் எழுதி வைத்திருக்கிறார்கள். இதன் வழி புற்று நோய் நாள்பட்ட நோய்கள், உடல் செயலிழப்பு உள்ளிட்ட பல நோய்களை குணப்படுத்த முடியும் என்று ரக்‌ஷிதா சொன்னார்.

சில சமயங்களில் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது என்கிறோம். நாம் வெளியே செல்வதற்கு முன்பு காலில் லேசான காயம் ஏற்பட்டு பெரிதாக ஏற்படவிருந்த விபத்து தடுக்கப்பட்டுள்ளதாக நம்புகிறோம். இதுபோலவே ரத்ததானம் செய்வதன் வழியும் பெரிய விபத்து தடுக்கப்படலாம். இதுதான் சூட்சம பரிகாரம். இதைத்தான் சித்தர்கள் அன்றே ஓலைச்சுவடியில் எழுதி வைத்தனர்.

இதுபோன்ற பல சூட்சம பரிகாரங்கள் உள்ளன. புற்று நோய், குடல் பிரச்சினை, மூளை தொடர்பான பிரச்சினை, மாரடைப்பு, குழந்தை பாக்கியம் இல்லாதது உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு சூட்சம பரிகாரம் வழி தீர்வு பிறக்கும் என்று மிகவும் உறுதியாகக் கூறுகிறார் திருமதி ரக்‌ஷிதா.

இதில் உதாரணங்களையும் சொன்னார் ரக்‌ஷிதா. தமிழ்நாடு, கோயம்புத்தூரில் இருந்து 17 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் குடியேறிய ஒரு தம்பதியருக்கு சூட்சம பரிகாரம் வழி கோயம்புத்தூர் வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறினார். கோயம்புத்தூரில் வீட்டை கட்டுங்கள். அந்த வீட்டில் குடிபுகுந்த 45ஆவது நாள் கருதரிப்பார் என்று கூறியிருந்தார்.

அந்த தம்பதியர் நம்பிக்கையில் கோயம்புத்தூரில் நிரந்தரமாக குடியேறினர். ஓராண்டில் வீட்டை கட்டி முடிந்தனர். அந்த வீட்டில் குடியேறினர். சித்தர் வழி ஜோதிடர் சொன்னது போல் 45ஆவது நாளில் அந்த பெண் கருதரித்தார். இதுபோன்று பல பெண்கள் சூட்சம பரிகாரத்தில் கருதரித்துள்ளனர்.

நமக்கு வாழ்க்கையில் நம்பிக்கை மிகவும் அவசியம். இறைவனே கைவிட்டாலும் நம் நம்பிக்கை நம்மை காப்பாற்றும். ஆகையால், சித்தர்கள் எழுதி வைத்த சூட்சம பரிகாரத்தில் பூர்வ ஜென்ம பாவங்களினால் இந்த ஜென்மத்தில் நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு தீர்வு காண முடியும் என்று திருமதி ரக்‌ஷிதா தேசம் வலைத்தளத்திடம் தெரிவித்தார்.

திருமதி ரக்‌ஷிதாவை சந்திக்க விரும்பும் மக்கள் அவருடன் கீழ்க்காணும் கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
+91 70105 19005

Comments