இந்திய நாடாளுமன்ற தேர்தல்! மலேசிய சுற்றுலா பயணிகளுக்கு பண விவகாரத்தில் கவனம் தேவை பொன்னமராவதி தேசம் செய்தியாளர் இரா.பாஸ்கர் வேண்டுகோள்

இந்திய நாடாளுமன்ற தேர்தல்!
மலேசிய சுற்றுலா  பயணிகளுக்கு பண விவகாரத்தில்  கவனம் தேவை
பொன்னமராவதி தேசம் செய்தியாளர் இரா.பாஸ்கர் வேண்டுகோள்

பொன்னமராவதி, மார்ச். 27-
இந்திய நாடாளுமன்ற தேர்தல் தற்போது நடைமுறையில் உள்ளதால் பாதுகாப்பு கருதி மலேசிய சுற்றுப் பயணிகள் பண விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று பொன்னமராவதி தேசம் செய்தியாளர் இரா.பாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த தேர்தலில் பண விநியோகத்தை தடுக்கும் முயற்சியில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருவதால்  மலேசியாவில் இருந்து  தமிழகத்திற்கு சுற்றுலா வரும் மலேசிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் வருகையை சில மாதங்கள் தள்ளி வைக்கும்படி இரா.பாஸ்கர் கேட்டுக் கொண்டார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

சுற்றுலா பயணத்தை தள்ளி வைக்க முடியாதவர்கள்
தாங்கள் கொண்டு வரும் இந்திய ரூபாய் பணம் தொடர்பான ரசீதை கட்டாயம் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் சுற்றுலா பயணிகள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்க நேரிடும்.
தேர்தல் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து உரிய ஆவணங்களை சரி பார்த்த பிறகே மீண்டும் பணத்தை ஒப்படைப்பார்கள் என்பதால் மலேசிய சுற்றுலா பயணிகள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று இரா.பாஸ்கர் கேட்டுக் கொண்டார்.

Comments