ம.இ.கா வரலாற்றில் புதிய அத்தியாயம்! பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹடி அவாங் வருகை

ம.இ.கா வரலாற்றில் புதிய அத்தியாயம்! 
பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹடி அவாங் வருகை

ஜி.முகேஸ்வரன்

கோலாலம்பூர், மார்ச் 28-
ம.இ.கா-பாஸ் கட்சி கூட்டணியின் எதிரொலியாக பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜி ஹடி அவாங் ம.இ.கா தலைமையகத்திற்கு வருகை மேற்கொண்டுள்ளது ம.இ.கா வரலாற்றில் புதிய அத்தியாயத்தை பதிவு செய்துள்ளது.

நாட்டின் 14 ஆவது பொதுத் தேர்தலில் ம.இ.கா பல தொகுதிகளில்  தோல்வியடைந்தது.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

தேசிய முன்னனி அரசாங்கம் தோல்வியைத் தழுவியதால் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் ஆட்சி  அமைத்தது. இந்நிலையில் எதிர்க்கட்சியாக மாறிய ம.இ.கா தனது எதிர்காலம் குறித்து ஆலோசனை நடத்தியதன் பலனாக ம.இ.கா-பாஸ் கட்சி கூட்டணி அமைந்தது.

இந்நிலையில் பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜி அவாங் தமது சகாக்களுடன் இன்று மார்ச் 28 வியாழக்கிழமை பிற்பகல் ம.இ.கா தலைமையகத்திற்கு வருகை மேற்கொண்டனர்.


இந்த வருகையின் போது டான்ஸ்ரீ விக்னேஷ்வரன், டத்தோஸ்ரீ ஹாஜி ஹடி அவாங் ஆகிய இரு கட்சித் தலைவர்களும் தங்கள் உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சு நடத்தினர்.


இந்த சந்திப்பில் பல விவகாரம் தொடர்பில் இணக்கம் காணப்பட்டது. ம.இ.கா தொகுதிகளில் பாஸ் கட்சி போட்டியிடாது என்றும், ஆலயம் உடைபடாது என்றும் தமிழ்ப்பள்ளி, தமிழ்மொழி நிலைநிறுத்தப்படும் என்றும் பாஸ் கட்சித் தலைவர் ஹடி அவாங் டான்க்ஸ்ரீ விக்னேஷ்வரனிடம் உறுதியளித்தார்.


இந்த சந்திப்பிற்குப் பிறகு தொகுதி தலைவர்கள் மத்தியில் இரு தலைவர்களும் உரையாற்றினர்.


ம.இ.கா பாஸ் கட்சியுடன் கூட்டணி அமைந்துள்ளது பலவழிகளில் நன்மை என்றும் கிளந்தான், திரெங்கானு ஆகிய இருமாநிலங்களில் ம.இ.காவும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் இதில் குறிப்பாக பதவிகள் வழங்க பாஷ் கட்சி தயாராக இருப்பதாக ஹடி அவாங் கூறியதாக டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் உரையாற்றிய ஹடி அவாங், ம.இ.கா-பாஸ் ஆகிய இருகட்சிகளும் நல்ல புரிந்துணர்வை கொண்டுள்ளதாகவும் தாங்கள் இந்தியர்கள் மீது நல்ல எண்ணம் கொண்டுள்ளதாகவும் தங்களால் ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகளுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது என்று கூறிய ஹடி அவாங், தாங்கள் இஸ்லாம் அடிப்படையிலான கட்சி என்றாலும் நபிகள் நாயகம் சொல்லிச் சென்ற மனிதர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும் என்ற தாரக மந்திரத்தை கடைபிடித்து வருவதாகவும் டத்தோஸ்ரீ ஹாஜி  ஹடி அவாங் சொன்னார்.
இந்நிகழ்வில் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் ஹடி அவாங்கிற்கு மாலை அணிவித்து சிறப்பித்தார்.

இதில் ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், உதவித் தலைவர்கள் டத்தோ டி.மோகன், டத்தோ சிவராஜ், டத்தோ டி.முருகையா, டத்தோ அசோஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

Comments