இந்தியர்களுக்கு அரணாக இருந்தவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்! நல்ல தலைவனை மக்கள் இழந்து விட்டார்கள்! - செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் கருத்து

இந்தியர்களுக்கு அரணாக இருந்தவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்!
நல்ல தலைவனை மக்கள் இழந்து விட்டார்கள்!
- செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் கருத்து

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மார்ச் 3-
நாட்டின் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இந்தியர்களின் நலனுக்கு முக்கியத்துவம் வழங்கிய பிரதமர். மக்கள் நல்ல தலைவனை இழந்து விட்டார்கள் என்று ஐபிஎப் கட்சியின் தேசியத் தலைவர் செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் கூறியுள்ளார்.

டத்தோஸ்ரீ நஜிப் பிரதமராக இருந்த காலகட்டத்தில் இந்தியர்களுக்கு எல்லா வகையிலும் உதவியாக இருந்தது  என்பதை யாரும் மறுக்க முடியாது. தமிழ்ப்பள்ளி, ஆலயம், சமுதாயம், கல்வி என்று  இந்தியர்களின் நலனுக்கு உதவி செய்தவர் டத்தோஸ்ரீ நஜிப். பத்துமலை திருத்தலத்திற்கு பலமுறை சென்று மக்களை சந்தித்தவர் நஜிப். ஒரு நாட்டின் தலைவன் இப்படித்தான் இருக்க வேண்டும். ஒரு நல்ல தலைவனை மக்கள் இழந்து விட்டார்கள் என்பதை மக்களே உணரத் தொடங்கி விட்டனர் என்று தேசம் வலைத்தளத்திடம் டத்தோ எம்.சம்பந்தன் தெரிவித்தார்.

ADVERTISEMENT ADVERTISEMENT

டத்தோஸ்ரீ நஜிப் தற்போது பிரதமராக இல்லாவிட்டாலும் மக்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார். அவர் போகும் இடமெல்லாம் மக்கள் அவரை சூழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அண்மையில் பாடாங் ஜாவாவில் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த சமூகவலைத்தளங்களில் வைரலான ஒரு இந்திய குடும்பத்தை நேரில் சந்தித்து உதவி வழங்கியிருக்கிறார். நடப்பு அரசாங்கத்தில் இருக்கும் நம்பிக்கை கூட்டணியின் நான்கு இந்திய அமைச்சர்கள் செய்ய வேண்டியதை டத்தோஸ்ரீ நஜிப் செய்திருப்பது நம்பிக்கை கூட்டணி இந்திய அமைச்சர்களுக்கு தலைகுனிவாகும் என்று டத்தோ சம்பந்தன் சுட்டிக் காட்டினார்.

தேசிய முன்னனி ஆட்சியில் இருந்த போது டத்தோஸ்ரீ நஜிப் இந்தியர் விவகாரங்களில் முக்கிய கவனம் செலுத்தினார். ஆனால், தற்போது நான்கு பேர் அமைச்சரவையில் இருந்தும் இந்தியர் விவகாரங்களை யார் கவனிப்பது என்ற போட்டா போட்டி ஏற்பட்டு வருகிறது. யாரைக் கேட்டாலும் நாங்கள் பல இனங்களை பிரதிபலிக்கிறோம் ( MULTI RACIAL PARTY) என்கிறார்கள். யாரைத்தான் நம்புவது? அந்த வகையில் டத்தோஸ்ரீ நஜிப் சிறந்த தலைவர். எத்தனை குற்றச்சாட்டுகள் இருந்தால் என்ன? அதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும். எதிர்கட்சியாக இருந்த போது ஜாகிர் நாயக், இந்திரா காந்தி விவகாரத்தில் குரல் கொடுத்தவர்கள் எல்லாம் வாய்மூடிய சாமியாராகி விட்டார்கள். அந்த வகையில் நல்ல தலைவனை மக்கள் இழந்து விட்டார்கள் என்று செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் மேலும் சொன்னார்.

Comments