டான்ஸ்ரீ பாலகிருஷ்ணன் மரண அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்ல! -டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன்

டான்ஸ்ரீ பாலகிருஷ்ணன் மரண அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்ல!
-டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன்

கோலாலம்பூர், மார்ச் 27-
மஇகாவின் முன்னாள் உதவித் தலைவர்   டான்ஶ்ரீ பாலகிருஷ்ணன் சாலை விபத்தில் அகால மரணமடைந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் இருந்து மீளமுடியவில்லை என்று ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தமது அனுதாபச் செய்தியில் கூறியுள்ளார்.

டான்ஸ்ரீ பாலகிருஷ்ணன் மரணச் செய்தி எனக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இவ்விபத்தில் மேலும் 3 ம.இ.கா கிளைத் தலைவர்களும் வாகன ஓட்டுநரும் பலியானார்கள் என்ற தகவல் தன்னை உருகுழையச் செய்ததாக தேசம் வலைத்தளத்திடம் மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் தெரிவித்தார்.


டான்ஸ்ரீ பாலகிருஷ்ணனின் மரணம் என்னை மட்டுமன்றி மஇகா உறுப்பினர்கள், ஜோகூர் மாநில மஇகா உறுப்பினர்கள் ஆகியோரை வெகுவாக பாதித்துள்ளது. டான்ஸ்ரீ பாலகிருஷ்ணன் திடீர் மரணம்  பெரும் கவலையை  ஏற்படுத்தியுள்ளது. இதில் மரணமடைந்தவர்கள் முக்கிய அரசியல் தலைவர்கள் என்பதால் காவல் துறை விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் கேட்டுக் கொண்டார்.

டான்ஸ்ரீ பாலகிருஷ்ணன் மற்றும் 3 ம.இ.கா தலைவர்களை இழந்து துயரத்தில் மூழ்கி இருக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கு டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.

வடக்கு- தெற்கு நெடுச்சாலையில் ஜோகூர் பாரு, கூலாய் அருகில் புதன்கிழமை நள்ளிரவு 12.10 மணியளவில்  நடந்த கோர விபத்தில் டான்ஶ்ரீ பாலகிருஷ்ணன் உட்பட நால்வர் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஒரே காரில் பயணம் செய்த 7 பேரில் 4 பேர் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் ம.இ.கா  முன்னாள் உதவி தலைவர் டான்ஸ்ரீ பாலகிருஷ்ணன்,  அவரது உதவியாளர் ராமச்சந்திரன், ம.இ.கா கிளைத் தலைவர்கள் என்று நால்வர் பலியாகினர். அவர்கள் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி ஒன்றை மோதி தள்ளியது என்று ஆரம்ப கட்ட விசாரணையில் கூறப்பட்டுள்ளது. மலேசியாவில் முதன்மை வர்த்தகராக விளங்கிய டான்ஸ்ரீ பாலகிருஷ்ணன் மறைவு அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

Comments