மலேசிய திரைப்பட விருதுக்கு "குற்றம் செய்யேல்" திரைப்படம் பரிந்துரை

மலேசிய திரைப்பட விருதுக்கு "குற்றம் செய்யேல்" திரைப்படம் பரிந்துரை

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மார்ச் 15-
           இந்திய சினிமா நடிகர்கள் நடித்திருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற தகவலால் சர்ச்சைக்குள்ளான "குற்றம் செய்யேல்" திரைப்படம் 30ஆவது மலேசிய திரைப்பட விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


மலேசியாவில் நிலவி வரும் குண்டர் கும்பல் நடவடிக்கைகளை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குள்ளான "குற்றம் செய்யேல்" திரைப்படம் மலேசிய திரைப்பட விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதானது இப்படத்தை மேலும் விளம்பரப்படுத்தியுள்ளது.

இந்த " குற்றம் செய்யேல் " திரைப்படத்தை யாரும் பார்க்க வேண்டாம். இதில் இந்திய சினிமாகாரர்கள் நடித்துள்ளனர்; வேலை செய்துள்ளனர்  என்றெல்லாம் கூறி படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று பொறுப்பற்ற தரப்பினர் சமூகவலைத்தளங்களில் தகவல் பரப்பினர். ஆனால், இத்திரைப்படத்தில் 110 மலேசிய கலைஞர்கள் நடித்தும் பணியாற்றியும் உள்ளனர். அதனை அவர்கள் தெரிவிக்கவில்லை.

இந்த சூழலில் இதையெல்லாம் முறியடித்து இரண்டாவது வாரத்தில் திரையேறிக் கொண்டிருக்கும் "குற்றம் செய்யேல்" திரைப்படம் மலேசிய திரைபட விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த சிறந்த மலேசிய திரைப்பட விருதுக்கு மொத்தம் 42 திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இதில் 25 மலாய் திரைப்படங்களாகும். மேலும் 8 சீனத்திரைப்படங்களும் 2 கெந்தோனிஸ் திரைப்படமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்  மலேசிய தயாரிப்பிலான 7 தமிழ்  திரைப்படங்கள் இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதில் "குற்றம் செய்யேல்" திரைப்படமும் ஒன்றாகும். இந்த மலேசிய திரைப்பட விருது விழா மார்ச் 30ஆம் நாள் புத்ராஜெயா, பிஐசிசி மண்டபத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments