மலேசிய நண்பன் பத்திரிகையின் ஈப்போ நிருபர் ப.சந்திரசேகரன் இறுதி சடங்கில் மக்கள் திரளாக பங்கேற்பு

மலேசிய நண்பன் பத்திரிகையின் ஈப்போ நிருபர் ப.சந்திரசேகரன் இறுதி சடங்கில் மக்கள் திரளாக பங்கேற்பு

எம்.சித்தார்த்

ஈப்போ, மார்ச் 27-
 பத்திரிகை துறையில் நீண்ட காலம் அனுபவம் பெற்றுள்ள மலேசிய நண்பன் நிருபர். பி. சந்திரசேகரின் இறுதிச் சடங்கில் பிரமுகர்கள், நண்பர்கள், பத்திரிகையாளர்கள் என பலரும் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.


இந்த இறுதிச் சடங்கு ஈப்போவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.  சந்திரசேகரனின் நல்லுடல் நேற்று புதன்கிழமை  பெர்ச்சாம் சுடலையில் தகனம் செய்யப்பட்டது.

இந்த இறுதிச் சடங்கில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன், புந்தோங் சட்டமன்ற உறப்பினர் சிவசுப்பிரமணியம், அமைச்சர் குலசேகரன் பிரதிநிதிகள், உலுகிந்தா சட்டமன்ற உறுப்பினர் அராபாட், பேரா மாநில ம.இ.கா தலைவர் டத்தோ வ. இளங்கோ, டான்ஸ்ரீ டத்தோ ஜி. இராஜூ, காவல் துறை அதிகாரிகள், பொது இயக்கத் தலைவர்கள் , அரசியல் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள்  என்று பலரும்  கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

 நீண்ட காலமாக பல்வேறு நாளிதழ்களில் ஈப்போ வட்டார நிருபராகப் பணியாற்றி வந்த பிரபல பத்திரிக்கையாளர் ப.சந்திரசேகரன் மார்ச் 26 செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 62. அண்மைய சில ஆண்டுகளாக மலேசிய நண்பன் நாளிதழின் ஈப்போ வட்டார நிருபராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments