இந்திரா காந்தி நியாயம் கோரி நாடாளுமன்றத்திற்கு பிரவேஷம்! விரைவில் பாரிஸுக்கு HVம் செல்வோம் ! -இங்ஙாட் உறுதி

இந்திரா காந்தி நியாயம் கோரி நாடாளுமன்றத்திற்கு  பிரவேஷம்!
விரைவில் பாரிஸுக்கு HVம் செல்வோம் !
 -இங்ஙாட் உறுதி

கோலாலம்பூர், மார்ச் 22-
    தனது  மகள் பிரசன்னா டீக்‌ஷாவை மீட்பது குறித்து திருமதி இந்திரா காந்தி வரும் ஏப்ரல் முதல் தேதியன்று நாடாளுமன்றத்தில் இந்திரா காந்தி சட்டதுறை அமைச்சர் டத்தோ லியு வுய் கியோங்கை சந்தித்து மகஜர் வழங்கவுள்ளார் என்று விவகார சிறப்பு பணிக் குழுவின் (இங்ஙாட்) தலைவர் அருண் துரைசாமி கூறினார்.

இந்திரா காந்தியின் கடைசி மகள் பிரசன்னா டீக்‌ஷாவை அவரின் பராமரிப்பில் வளர்க்க நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் முன்னாள் கணவர் முகமட் ரிடுவான் (பத்மநாபன்) குழந்தையை வழங்க இது நாள் வரை முன் வரவில்லை.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

பிரசன்னாவை கண்டுப்பிடித்து தாயாரிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் காவல் துறைக்கு உத்தரவிட்ட போதிலும் அவரையும் முகமட் ரிடுவானையும் இது நாள் வரை கண்டு பிடிக்க முடியவில்லை.

இதனால் இவ்விருவரும் மலேசியாவில் தான் வசிக்கின்றனரா எனும் சந்தேகம் எழுகின்றது. இந்நிலையில் பிரசன்னாவின் பாதுகாப்பும் கேள்வி குறியாக உள்ளது.

 நீதிமன்ற உத்திரவு கிடைத்த பின்பும் தனது மகளை காணமல் தவிக்கும் இந்திரா காந்திக்கு உதவவே இந்த இங்ஙாட் குழு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் வழி நாங்களும் பிரசன்னாவை மீட்க பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

அவ்வகையில் இவ்விவகாரத்தை தீர்ப்பதில் ஒரு சில தரப்பினர் மெத்தன போக்கை காட்டி வருவதையும் நாங்கள் அறிந்தோம். எனவே இவ்விவகாரத்தை நேரடியாக சட்டத்துறை அமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லவுள்ளோம். ஏப்ரல் 1ம் தேதி இந்திரா காந்தி நாடாளுமன்றத்தில் அமைச்சரை நேரடியாக சந்தித்து மகஜர் வழங்கவுள்ளார் இந்திரா காந்தி.

அதோடு பிரதமர் துன் மகாதீரின் பார்வைக்கு மட்டும் கொண்டு செல்லக் கூடிய இவ்விவகாரம் தொடர்புடைய ரகசிய ஆவண குறிப்பையும் வழங்கவுள்ளோம்.

ஆயினும் ஒரு சில முக்கிய காரணங்களினால் அந்த ஆவணங்களின் உள்ளடக்கத்தை நாங்கள் தற்பொழுது வெளியே விட விரும்பவில்லை. ஆனால் அங்கு சிறப்பு செய்தியாளர் சந்திப்பு கூட்டமும் நடைபெறும் என அருண் விவரித்தார்.

மேலும் பிரசன்னா டிக்‌ஷா “மைகிட்” அடையாள ஆவணம் விவகாரத்தில் தேசிய பதிவிலாகாவில் குழறுபடிகள் நடந்துள்ளது என நாங்கள் கூறியதை அவ்விலாகா மறுத்து நாங்கள் மன்னிப்பு கோர வேண்டும் என கால அவகாசம் முன் வைத்தது.

ஆயினும் இவ்விவகாரம் தொடர்பில் நாங்கள் முன்வைத்த கருத்துக்கு எங்களிடம் நிறைய ஆதாரங்கள் உள்ளது. இதனால் நாங்கள் மன்னிப்பு கோர அவசியம் கிடையாது. இவ்விவகாரம் தொடர்பில் அத்தரப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்தவும் நாங்கள் தயாராக உள்ளோம்.

அதே போல் காவல்துறை
தலைவரை கூடிய விரைவில் சந்தித்து பிரசன்னா டீக்‌ஷாவை மீட்க சிறப்பு விசாரணை குழு அமைக்க கோரிக்கை முன் வைக்கவுள்ளோம் என்றும் அருண் குறிப்பிட்டார்.

இதற்கிடையே இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் முகமட் ரிடுவான் கடந்த வருடம் ஆகஸ்ட் மாத வாக்கில் பினாங்கு மாநிலத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது. அவர் “மெர்சடிஸ்”  “இ” ரக கருப்பு நிற காருடன் ( WYE 4704) இருந்த புகைப்படமும் எங்களுக்கு கிடைத்துள்ளது.

எனவே அவர் குறித்தும் அந்த கார் குறித்தும் தகவல் ஏதும் அறிந்தால் பொதுமக்கள் எங்களை 016-7114252 அல்லது 012-6755327 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் அருண் கேட்டுக் கொண்டார்.

மேலும் இந்திரா காந்தியின் விவகாரம் குறித்து பிரான்ஸ் நாட்டின் “இண்டர்போல்” காவல் துறையிடம் முறையீடு முன் வைத்தோம். தற்பொழுது அவர்களிடத்திலிருந்து எங்களுக்கு அழைப்பு கிடைத்துள்ளது.

இவ்விவகாரம் குறித்து அவர்களுடன் கலந்தாலோசிக்க கூடிய விரைவில் நாங்கள் (இங்ஙாட்) பிரான்ஸ் நாட்டிற்கு (லியோன் நகர்) பயணம் மேற்கொள்ளவுள்ளோம்.
இது மட்டுமல்லாது, இவ்விவகாரத்தை  நாங்கள் ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமை இலாகாவிடமும் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சின் பார்வைக்கும் எடுத்து செல்ல எண்ணம் கொண்டுள்ளோம்.

இங்காட் அமைப்பின் ஒரே நோக்கம் பிரசன்னாவை பாதுகாப்பாக மீட்டு அவரின் தாயாரிடம் ஒப்படைப்பதுதான். இந்த விவகாரத்தை பயன் படுத்தி அரசியல், அல்லது மத ரீதியிலாக லாபம் தேடும் எண்ணம் எங்களுக்கு துளியும் கிடையாது என்றும் அருண் தெளிவுப்படுத்தினார்.

பிரசன்னா டீக்‌ஷா, முகமட் ரிடுவான் குறித்து மிக சரியான தகவலை வழங்குவோருக்கு  10,000 வெள்ளி சன்மானம் வழங்கப்படும் என இங்ஙாட் ஏற்கெனவெ அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments