அரசு துறைகள் மித்ரா (MITRA) போன்று ஆற்றலுடன் செயல்பட வேண்டும்! ஐயப்பன் முனியாண்டி வலியுறுத்து

அரசு துறைகள் மித்ரா (MITRA) போன்று  ஆற்றலுடன் செயல்பட வேண்டும்!
ஐயப்பன் முனியாண்டி வலியுறுத்து

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மார்ச் 13-
பிரதமர் துறையின் கீழ் செயல்படும் அமைச்சர் பொன். வேதமூர்த்தி தலைமையிலான மித்ரா போன்று அரசு துறைகள் செயல்பட வேண்டும் என்று பெஸ்தாரி ஜெயா கலை, பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் ஐயப்பன் முனியாண்டி வலியுறுத்தியுள்ளார்.

தேசிய முன்னனி காலத்தில் செடிக் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்தியர்களுக்கான பொருளாதார மேம்பாட்டு துறையான மித்ரா தற்போது பிரதமர் துறையின் கீழ் துடிப்புடன் செயல்பட்டு வருகிறது. மித்ரா தற்போது பி40 பிரிவினருக்கான நிறுவனங்கள் தொழில்திறன் பயிற்சி, தொழில் மேம்பாட்டுத்திறன் பயிற்சி, தொழில் முனைவர் வர்த்தக பயிற்சி, அரசு சாரா இயக்கங்களின் பயிற்சி ஆகிய விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

ADVERTISEMENT ADVERTISEMENT

 மித்ரா பணியாளர்கள் சிறந்த சேவையை வழங்கி வருகிறார்கள். மித்ரா அலுவலகத்திற்கு தொடர்பு கொண்ட மறுகணமே மறுமுனையில் பணியாளர்கள் தமிழ் மற்றும் மலாய் மொழியில் பேசி நல்ல ஆலோசனைகளை வழங்குகின்றனர். மித்ராவை முன்னுதாரணமாகக் கொண்டு மற்ற அரசு துறைகளும் செயல்பட வேண்டும் என்று ஐயப்பன் முனியாண்டி கேட்டுக் கொண்டார்.

சில அரசு துறை அலுவலகங்களுக்கு அழைத்தால் முதலில் தொலைப்பேசி அழைப்பை எடுக்கவே பல நிமிடங்கள் ஆகும். சில சமயங்களில் அழைப்பு செய்யப்பட்டு பல நிமிடங்கள் மறுமுனையில் பதில் வராது. மீண்டும் மீண்டும் அழைக்க வேண்டியிருக்கிறது. இது அரசு துறைகளில் நீண்ட காலமாகவே இருந்து வரும் பிரச்சினையாகும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரசு துறை இயக்குநர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐயப்பன் முனியாண்டி கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் நம்பிக்கை கூட்டணியின் இந்திய அமைச்சு சம்பந்தப்பட்ட துறைகளும் இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டி வருகின்றனர். அந்த அமைச்சில் பதவியை மட்டும் அலங்கரிப்பவர்கள் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய தவறி விட்டனர். அவர்களின் மக்கள் சேவை படுமோசமாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரும் மௌனம் சாதித்து வருவது வேதனையளிக்கிறது என்றார் ஐயப்பன் முனியாண்டி.

இந்த வரிசையில் மித்ராவின் செயல்பாடுகள் பாராட்டத்தக்க வகையில் உள்ளது. மித்ரா அலுவலக அதிகாரிகளை பாராட்டும் அதேவேளையில் மற்ற அரசு துறைகளை மித்ராவின் மக்கள்  சேவையை  பின்பற்ற வேண்டும் என்று ஐயப்பன் முனியாண்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments