களும்பாங் மைஸ்கில்ஸ் கல்லூரிக்கு அரசாங்க உதவி! முதல் கட்டமாக வெ.15 லட்சம் மகாத்மா காந்தி சிலை பூங்கா திறப்பு விழாவில் மனிதவள அமைச்சர் குலசேகரன் உரை 150 மரங்கள் நடப்பட்டன

களும்பாங் மைஸ்கில்ஸ் கல்லூரிக்கு அரசாங்க உதவி!
முதல் கட்டமாக வெ.15 லட்சம்
மகாத்மா காந்தி சிலை பூங்கா திறப்பு விழாவில்
மனிதவள அமைச்சர் குலசேகரன் உரை
150 மரங்கள் நடப்பட்டன

செய்தியாளர் : குணாளன் மணியம்
படங்கள் : ஜி.முகேஸ்வரன்

கோலாலம்பூர், ஏப்ரல் 24-
களும்பாங் மைஸ்கில்ஸ் கல்லூரிக்கு அரசாங்க உதவியாக எச்ஆர்டிஎப்பில் இருந்து 15 லட்சம் வெள்ளி உதவி நிதி வழங்கப்படும் என்று மனிதவள அமைச்சர் குலசேகரன் கூறினார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

மைஸ்கில்ஸ் அறவாரியம் ஏழை மக்களின் குறிப்பாக மாணவர்களின் நலனுக்கு பாடுபட்டு வருகிறது. அடித்தட்டு குடும்ப பிள்ளைகளின் நலனுக்காக 34 ஏக்கரில் மைஸ்கில்ஸ்  கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட 200 மாணவர்கள் பல்வேறு தொழில்திறன் பயிற்சிகளை இலவசமாக மேற்கொண்டு வருகின்றனர். இக்கல்லூரிக்கு அரசாங்கத்தின் உதவி மிகவும் அவசியம் என்று குலசேகரன் தெரிவித்தார்.

முதல் கட்டமாக எச்ஆர்டிஎப்பின் மூலம் 15 லட்சம் வெள்ளி வழங்கப்படும். அதன்பிறகு தனியார் நிறுவனங்களின் உதவியை பெற்றுத்தருவேன். இதன்வழி இலவச தொழில்திறன் கல்வியை வழங்கி வரும் மைஸ்கில்ஸ் அறவாரியம் சிறப்பாக செயல்பட முடியும் குலசேகரன் சொன்னார்.

மைஸ்கில்ஸ் வளாகத்தில் காந்தி சிலை பூங்காவை
மனிதவள அமைச்சர் குலசேகரன் திறப்பு விழா செய்து வைத்து உரையாற்றினார். மைஸ்கில்ஸ் அறவாரியம் இலாப நோக்கமற்ற ஓர் அமைப்பு. இதில் ஏழை இந்திய மாணவர்கள் கல்வி பயில்வது பாராட்டத்தக்க விஷயம். மைஸ்கில்ஸ் அறவாரியத்தை ஏழை இந்திய மாணவர்களின் நலனுக்காக திறம்பட நடத்தி வரும் மைஸ்கில்ஸ் அறவாரியத்தின் இயக்குநர் வழக்கறிஞர் பசுபதியை  அமைச்சர் குலசேகரன் பாராட்டினார்.


இந்தியாவின் சுதந்திரத் தந்தை அண்ணல் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு உலகளவில் ஈராண்டுகள் அதாவது அக்டோர் 3  2018 தொடங்கி அக்டோபர் 3 2020 வரை கொண்டாடப்படவிருப்பதை முன்னிட்டு மைஸ்கில்ஸ் களும்பாங் வளாகத்தில் மைஸ்கில்ஸ் அறவாரியமும் மலேசிய இந்திய தூதரகமும் இணைந்து காந்தி சிலையுடன் கூடிய ஒரு நினைவு பூங்காவை நிறுவியது.

 இதில் 150 மரக்கன்றுகள் நடப்பட்டன. அமைச்சர் குலசேகரன் மற்றும் இந்திய தூதரக அதிகாரி ஒரு மரத்தை நட்டனர்  என்பது குறிப்பிடத்தக்கது.


Comments