மலேசியாவில் முதல் முறையாக தமிழ்நாடு டெய்சி மருத்துவமனை ஆதரவில் தமிழர் பாரம்பரிய உணவுத் திருவிழா 2019! பிரிக்பீல்ட்ஸ் கிருஷ்ணர் ஆலயத்தில் ஏப்ரல் 12,13,14 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும்! பிரசாத் கண்ணன் தகவல்

மலேசியாவில் முதல் முறையாக தமிழ்நாடு டெய்சி மருத்துவமனை ஆதரவில் தமிழர் பாரம்பரிய உணவுத் திருவிழா 2019!
பிரிக்பீல்ட்ஸ் கிருஷ்ணர் ஆலயத்தில் ஏப்ரல் 12,13,14 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும்!
பிரசாத் கண்ணன் தகவல்

குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஏப்ரல் 2-
மலேசியாவில் முதல் முறையாக தமிழ்நாடு டெய்சி மருத்துவமனை ஆதரவில் "தமிழர் பாரம்பரிய உணவுத் திருவிழா 2019" எனும் மாபெரும் உணவுத் திருவிழா 
பிரிக்பீல்ட்ஸ் கிருஷ்ணர் ஆலயத்தில் நடைபெறவிருப்பதாக அதன் ஏற்பாட்டாளர் எட்டாம் அறிவு பிரசாத் கண்ணன் கூறினார்.

இந்த உணவுத் திருவிழா ஏப்ரல் 12,13,14 ஆகிய மூன்று நாட்கள் பிரிக்பீல்ட்ஸ் ஸ்ரீ கிருஷ்ணர் ஆலய பிருந்தாவனம் மண்டபத்தில் நடைபெறவிருப்பதாக மாயா டிவி நியூஸ், மாயா மீடியா ஒர்க்ஸ் தோற்றுநர் 
பிரசாத் கண்ணன் தெரிவித்தார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

தமிழ்நாட்டு மக்கள் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் பலரும் பாரம்பரிய உணவு வகைகளை மறந்து விட்டனர். ஒரு சிலர் அவ்வப்போது பாரம்பரிய உணவு வகைகளை சமைத்தாலும்கூட அது முழுமை பெறவில்லை. 

இந்நிலையில் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நமது முன்னோர்கள் மனிதர்கள்  உட்கொண்ட உணவுகள், பொருட்கள் உணவுத் தொழில் போன்றவை உட்பட பல விஷயங்களை ஒரு கண்காட்சியாக நடத்துவதுதான் இந்த  "தமிழர் பாரம்பரிய உணவுத் திருவிழா 2019" என்று பிரசாத் கண்ணன் தெரிவித்தார்.

அந்த காலத்தில் இருந்த நிறைய விஷயங்கள் இப்போது மறைந்து விட்டன. இவை மறைக்கப்பட்டதா? மறுக்கப்பட்டதா? அப்போது கைக்குத்தல் அரிசி, உமி எடுக்கப்படாத அரிசி பயன்படுத்தப்பட்டன. ஆனால், இன்று வசீகரிக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுக்கு மக்கள் மாறிவிட்டார்கள் என்றார் பிரசாத் கண்ணன்.

ஒரு காலத்தில் அம்மி கல், ஆட்டுக் கல் பயன்படுத்தப்பட்டன. இன்று எல்லாம் இயந்திரமயமாகி விட்டது. அன்று செக்கில்  ஆட்டப்பட்ட எண்ணெய். இன்று இயந்திரத்தில் பிழியப்பட்ட எண்ணெய். இப்படி எல்லாவற்றையும் மறந்து விட்ட தமிழர்களுக்காகவே முதல் முறையாக இந்த "தமிழர் பாரம்பரிய உணவுத் திருவிழா 2019" மலேசியாவில் நடத்தப்படுவதாக பிரசாத் கண்ணன் குறிப்பிட்டார்.

இந்த துரித உணவு பழக்கத்தை மாற்றி 18ஆம் நூற்றாண்டு உணவு வகைகளை மக்கள் மனதில் பதிய வைப்பதுதான் இந்த உணவுத் திருவிழாவின் நோக்கம். இந்த உணவுத் திருவிழாவில் தமிழ்நாட்டு உணவு வல்லுநர்கள் பாரம்பரிய உணவுகள் குறித்து சமைத்துக் காட்டுவதோடு விளக்கமும் வழங்குவர். மேலும் பாரம்பரிய உணவுப் பொருட்களான நெய், தேன், வடகம், நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பலவிதமான மரச்செக்கு எண்ணெய் வகைகள், பல்பொடி உள்ளிட்ட பல பொருட்கள் இந்த உணவுத் திருவிழாவில் இடம்பெறும்.

இந்த "தமிழர் பாரம்பரிய உணவுத் திருவிழா 2019" நிகழ்வில் பாரம்பரிய மருத்துவ முகாம், மருத்துவ விளக்கம் உள்ளிட்ட பல நிகழ்வுகள் இதில் இடம்பெறும். இந்த உணவுத் திருவிழா முற்றிலும் இலவசமாக நடைபெறும்.  மலேசியா எம்ஜிஆர் புரோடாக்‌ஷன்ஸ் ரிசோர்சஸ், சிங்கப்பூர் எம்ஜிஆர் புரோடாக்‌ஷன்ஸ், எஸ்.என் முத்து இவென்ஸ் மலேசியா, மலேசிய ஊடகங்கள் ஆகிய நிறுவனங்கள் ஆதரவு வழங்கியுள்ள இந்நிகழ்வு ஏப்ரல் 12இல் மாலை 3.00 மணி தொடங்கி இரவு 9.00 மணிவரையிலும் ஏப்ரல் 13, 14இல் காலை 10.00 மணி தொடங்கி இரவு 9.00 மணிவரையிலும் நடைபெறும்.

 "இனியாவது மாறுவோம், இனியாவது மாற்றுவோம்" எனும் கருபொருளுடன் நடைபெறும்  "தமிழர் பாரம்பரிய உணவுத் திருவிழா 2019" நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளும்படி பிரசாத் கண்ணன் அழைப்பு விடுத்துள்ளார். தொடர்புக்கு  +6014-2362205 (மலேசியா), +919790378203 (இந்தியா), +6596978637 (சிங்கப்பூர்)

Comments