இந்திய மாணவர்களுக்கு தேசிய முன்னணி வழங்கிய 2,200 இடங்களை நம்பிக்கை கூட்டணி பறித்துக் கொண்டது இந்திய மாணவர்கள் மேல்முறையீடு செய்ய ஆலோசனை -டத்தோ கமலநாதன்

இந்திய மாணவர்களுக்கு தேசிய முன்னணி வழங்கிய 2,200 இடங்களை நம்பிக்கை கூட்டணி பறித்துக் கொண்டது
இந்திய மாணவர்கள் மேல்முறையீடு செய்ய ஆலோசனை
-டத்தோ கமலநாதன்

குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஏப்ரல் 20-
இந்திய மாணவர்களுக்கு தேசிய முன்னணி வழங்கிய 2,200 இடங்களை நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் பறித்துக் கொண்டுள்ளதை அவர்களின் அறிக்கை காட்டுவதாக முன்னாள் கல்வி துணை அமைச்சர் ப.கமலநாதன் கூறினார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

மெட்ரிக்குலேசன் வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் ஏப்ரல் 29ஆம் நாளுக்குள் மேல்முறையீடு செய்து அது தொடர்பான நகலை என்னிடம் வழங்குங்கள். நான் முயற்சி எடுக்கிறேன். உண்மையை ஒரு போதும் மூடி மறைக்க முடியாது. கல்வி அமைச்சு உண்மையை மூடி மறைத்துள்ளதை அவர்களின் அளிக்கும் காட்டுகிறது.

உங்களால் தீர்வு காண முடியவில்லை என்றால் நான் உதவத் தயாராக இரௌக்கிறேன் என்று ம.இ.கா தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினருமான டத்தோ கமலநாதன் தெரிவித்தார்.

இந்திய மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடாதீர்கள். முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் வழங்கிய  2,200 இடங்களை இந்திய மாணவர்களுக்கு வழங்குங்கள். அதனை ஏமாற்றி விடாதீர்கள் என்றார் கமலநாதன்.

நாட்டில் இருக்கு 17 மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் 25 ஆயிரம் மாணவர்கள் படிக்க முடியும். இதில் அதிகபட்சம் 28 ஆயிரம் மாணவர்கள் படிக்கலாம். ஆனால், 25 மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுகிறது. 90 விழுக்காடு மலாய் மாணவர்களுக்கு வழங்கப்படும் வேளையில் மீதமுள்ள 10 விழுக்காட்டில் 2,200 இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கமலநாதன் கேட்டுக் கொண்டார்.

கல்வி அமைச்சர் டாகடர் மஸ்லீயின் உள்நோக்கம் புரியவில்லை. ஆனால், உண்மையை மூடி மறைக்காமல் 2,200 இடங்களை இந்திய மாணவர்களுக்கு வழங்குங்கள் என்று டத்தோ கமலநாதன் வலியுறுத்தினார்.

Comments