மெட்ரிகுலேசன் இடங்கள் 40 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது கண்துடைப்பு வேலையா?

மெட்ரிகுலேசன் இடங்கள் 40 ஆயிரமாக  அதிகரிக்கப்பட்டது கண்துடைப்பு வேலையா? 

கோலாலம்பூர், ஏப்ரல் 24-
அமைச்சரவை முடிவின்படி எஸ்.பி.எம் முடித்த மாணவர்களுக்கான மேட்ரிகுலேசன் இடங்களை 25 ஆயிரத்தில் இருந்து
40 ஆயிரமாக 60% அதிகரித்திருக்கும் வேளையில் பூமிபுத்ரா- பூமிபுத்ரா அல்லாதாருக்கான ஒதுக்கீடு 90%:10% விகித்தில் அமையும் என கல்வி அமைச்சின் அறிக்கை ஒரு கண்துடைப்பு வேலையா என்று பகாங் மாநில ம.இ.கா தலைவர் வீ. ஆறுமுகம்
கேள்வி எழுப்பியுள்ளார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இந்த திடீர் அதிகரிப்பினை பூர்த்தி செய்யும் வகையில் ஆசிரியர் பயிற்சி கூடங்கள் மெட்ரிகுலேசன் மையங்களாக உருமாற்றம் பெறும் என கல்வி அமைச்சு கூறுகிறது. இட வசதி, மெட்ரிகுலேசன் போதனா முறைக்குறிய ஆசிரியர்கள் போதுமான எண்ணிக்கையில் உள்ளனரா? குறுகிய காலத்தில் அவர்களை தயார்ப்படுத்த தான் இயலுமா என்று ஆறுமுகம் கேட்டார்.

முந்தைய டத்தோஸ்ரீ நஜிப் அரசின் கீழ் இந்திய மாணவர்களுக்கு 2,200 இடங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. ஆனால், தற்போது பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு 4,000 இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பினும், இன விகிதாச்சாரம்படி மெரிட்க் முறையில் சீன மாணவர்களோடு சம தேர்ச்சிப் பெற்ற இந்திய மாணவர்கள் 30% விழுக்காடாக இருந்தாலும் நமக்கு கிடைக்கப்போவது 1,200 இடங்களே.

மெட்ரிகுலேசன் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பினால், பொதுப்பல்கலைக்கழக நுழைவுக்கு எஸ்.டி.பி.எம் மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு குறைக்கப்படும் வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன. இதனால் பாதிக்கப்படப்போவதும் நமது இந்திய மாணவர்களே என்பதில் சந்தேகமில்லை.

அமைச்சரவையில் நான்கு இந்திய அமைச்சர்கள் இருந்தும் இந்த பாதக சூழலினை புரிந்துக்கொள்ள இயலவில்லையா? இந்த பிரச்சினையை தொட்டு ஏதும் வாய் திறந்தார்களா? மௌனம்தான் கலைவார்களா?

ஆக மொத்ததில், மெட்ரிகுலேசன் விவகாரத்தில் இன்றைய அமைச்சரவையின் முடிவு இந்திய சமுதாயத்திற்கு பாதகமான முடிவே! புதிய மலேசியாவில் இந்திய சமுதாயம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவது மீண்டும் நிரூபணம் ஆகின்றது என்று
வீ. ஆறுமுகம்
கூறினார்.

Comments