சிதம்பரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 43ஆவது ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது

சிதம்பரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 43ஆவது ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது

இரா.பாஸ்கர் பொன்னமராவதி தேசம் செய்தியாளர்

புதுக்கோட்டை, ஏப்ரல் 2-
தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள வலையபட்டி சிதம்பரம் பதின்மப் பள்ளியின் 43ஆம் ஆண்டு விழா மிகவும்  கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

புதிதாக தொடங்கப்படவுள்ள சிடி இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிடி இன்டர்நேஷனல் பள்ளி சின்னத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். இதில் நீலாவதி கோபாலகிருஷ்ணன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் சிதம்பரம் பள்ளியின் இயக்குநரும், சிடி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனருமான சிதம்பரம் வரவேற்றுப் பேசினார்.
இறுதியில் அப்பள்ளி முதல்வர் வே.முருகேசன் நன்றியுரை ஆற்றினார்.  இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அப்பள்ளி தனி அலுவலர் இரா.ராமசந்திரன், துணை முதல்வர் வைதேகி, கலைமதி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள வலையபட்டி சிதம்பரம் பதின்மப் பள்ளியில் இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு பினாங்கு மாநில முன்னாள் காவல் துறை தலைவர் ஆ.தெய்வீகன் மூன்று நாள் பயணமாக வந்திருந்த இப்பள்ளிக்கு வந்திருந்த போது  கோலாகல வரவேற்புடன் பாராட்டு விழா நடத்தப்பட்டது
என்பது குறிப்பிடத்தக்கது.

Comments