இந்து மதத்தை இழிவாகப் பேசிய ஜம்ரி வினோத் காளிமுத்து கைது பெர்லிஸ் டி9 பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்

இந்து மதத்தை இழிவாகப் பேசிய ஜம்ரி வினோத் காளிமுத்து கைது
பெர்லிஸ் டி9 பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்

குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஏப்ரல் 28-
இந்து மதத்தை இழிவாகப் பேசிய ஜம்ரி வினோத் காளிமுத்து பெர்லிஸ் மாநிலத்தில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கங்கார் காவல் துறை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

ஜம்ரி வினோத் பெர்லிஸ் டி9 பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு வாகனத்தில் காவல் நிலைத்திற்கு அழைத்துச் செல்லும் காணொளி சமூக வலைத்தளங்களில் தீ போல் பரவி விட்டது.


இத்தகைய
இந்து மதத்தில் 33 கோடி தெய்வங்கள் இருக்கிறது என்றும் கல்லை வணங்குகிறார்கள் என்றும் ஒரு காணொளியில் இழிவாகப் பேசினார். இதனால் கொதித்தெழுந்த அரசு சாரா இயக்கங்கள், பொது மக்கள் என்று பலரும் காவல் துறையில் ஜம்ரிக்கு எதிராக புகார் செய்தனர்.இந்திய காவல் துறையால் தேடப்படும் ஜாகிர் நாயக்கின் தீவிர ஆதரவாளரான ஜம்ரி ஓர் இந்து. அவரது இயற்பெயர் வினோத் காளிமுத்து. ஆனால், வினோத் முஸ்லிம் மதத்தை தழுவி இந்து மதத்தை இழிவாக பேசி வருகிறார். இதற்கு ஜாகிர் நாயக்தான் மூலகாரணம். இந்திய பிரஜையான ஜாகிர் நாயக் பண ஊழல், தீவிரவாதத்தை தூண்டிய உரைக்காக இந்திய காவல் துறையால் தேடப்பட்டு வருகிறார்.இந்நிலையில் ஜம்ரி வினோத் இந்து மத த்தை இழிவாகப் பேசி கண்டனத்திற்கு ஆளானார். முஸ்லிம் மதத்தை சார்ந்த பலரும் ஜம்ரிக்கு காணொளி வழி கண்டனம் தெரிவித்தனர். ஜம்ரி வினோத் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பெர்லிஸ் காவல் துறை தலைவர் டத்தோ நோர் முசார் முகமட் உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments