ஊழல் இல்லாத அரசாங்கத்தை வடிவமைக்க துன் மகாதீர் உறுதி செய்ய வேண்டும் பிரசாத் சந்திரசேகரன் வலியுறுத்து

ஊழல் இல்லாத அரசாங்கத்தை வடிவமைக்க துன் மகாதீர் உறுதி செய்ய வேண்டும்
பிரசாத் சந்திரசேகரன் வலியுறுத்து

ஜி.முகேஸ்வரன்

கோலாலம்பூர், ஏப்ரல் 4-
ஊழல் இல்லாத அரசாங்கம் செயல்படுவதை ஊழல் தடுப்பு ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று ம.இ.கா  செலாயாங் தொகுயின் இளைஞர் பிரிவு துணைத் தலைவர் பிரசாத் சந்திரசேகரன் வலியுறுத்தியுள்ளார்.

நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் ஊழலாற்ற அரசாங்கமாக செயல்பட வேண்டும் என்பதற்காக பிரதமர் துன் மகாதீர் அண்மையில் தேசிய ஊழல் தடுப்பு திட்டத்தை தொடக்கி வைத்தார். இந்நிலையில் அமைச்சர் ஒருவரின் அரசியல் செயலாளர் ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்வழி நம்பிக்கை கூட்டணியின் அத்திட்டம் கேள்விகுறியாகியுள்ளதாக பிரசாத் சந்திரசேகரன் சொன்னார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இந்த தேசிய ஊழல் தடுப்பு திட்டமானது லஞ்சம் வழங்குபவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது மட்டுமல்ல. மாறாக கடந்த அரசாங்கத்தின் ஊழல் நடவடிக்கைகள் புதிய அரசாங்கத்தில் தொடரக்கூடாது என்பதும் அடங்கும் என்று துன் மகாதீர் அறிவித்திருந்த போதிலும் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சரின் அரசியல் செயலாளர் ஊழல் நடவடிக்கைகாக கைது செய்யப்பட்டுள்ளதானது நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் தேசிய ஊழல் தடுப்பு திட்டத்தில் பலவீனம் இருப்பதை காட்டுவதாக பிரசாத் சந்திரசேகரன் குறிப்பிட்டார்.

பிரதமர் துன் மகாதீர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர் முதலில் சொன்னதை கடைபிடிக்க வேண்டும். மேலும் ஆளுங்கட்சி அமைச்சர்கள், எதிர்கட்சி எம்பிகளுக்கும் இந்த தேசிய ஊழல் தடுப்பு திட்ட பயிற்சி வழங்கப்பட வேண்டும்.  எதிர்க்கட்சி தலைவர்கள் இதனை ஆதரிக்க வேண்டும். தேசிய ஊழல் தடுப்பு திட்ட ஆணையத்திற்கு முக்கிய கடப்பாடு உள்ளது. ஆனால், மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அன் செயல்பாடுகள் இருக்க வேண்டும். மக்கள் தங்கள் எதிர்பார்ப்பை புதிய மலேசியாவின் மீது வைத்துள்ளனர் என்றார் பிரசாத் சந்திரசேகரன்.

Comments