மெட்ரிக்குலேசன் விவகாரத்தில் கல்வி அமைச்சு அதிகாரிகளின் விளக்கத்தில் அதிருப்தி அமைச்சரவையில் துன் மகாதீர், மஸ்லீயை சந்திப்போம் அமைச்சர் குலசேகரன் தகவல்

மெட்ரிக்குலேசன் விவகாரத்தில் கல்வி அமைச்சு அதிகாரிகளின் விளக்கத்தில் அதிருப்தி
அமைச்சரவையில் துன் மகாதீர், மஸ்லீயை சந்திப்போம்
அமைச்சர் குலசேகரன் தகவல்

குணாளன் மணியம்


கோலாலம்பூர், ஏப்ரல் 20-
மெட்ரிகுலேசன்  விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சு அதிகாரிகளின் விளக்கத்தில் மனநிறைவு இல்லாததால் புதன்கிழமை பிரதமர் துன் மகாதீர் முகமட்டுடன் தனிப்பட்ட முறையில் விவாதிக்கவிருப்பதாகமனிதவள அமைச்சர் குலசேகரன் கூறினார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

மெட்ரிக்குலேசன் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது குறித்து இந்திய மாணவர்களும் பெற்றோர்களும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் வேளையில் கே.எல்.சி.சி திரையரங்கில் "தினஞ்சலி" ஆவணப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு வருகை தந்த அமைச்சர் குலசேகரனிடம் பத்திரிகையாளர்கள் கேள்விக்கு குலசேகரன் பதிலளித்தார்.

"நான் என்ன பேசினாலும் அது வைரலாகி விடுகிறது. நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். கடந்த அமைச்சரவையில் இவ்விவகாரம் குறித்து பேசப்பட்டது. ஆனால், ஒரு முடிவு இல்லை. இந்நிலையில் கல்வி அமைச்சின் அதிகாரிகள் தந்த விளக்கத்திலும் திருப்தி இல்லை. ஆகையால், அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் துன் மகாதீர் தலைமையில் சந்திப்பு நடத்துவோம் என்று குலசேகரன் சொன்னார்.

நம்பிக்கை கூட்டணி இந்திய நாடாளுமன்ற - சட்டமன்ற  உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஓர் அவசரக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை
பினாங்கு மாநில துணை முதல் அமைச்சர் பேராசிரியர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் இந்து அறவாரியம், மெட்ரிகுலேசன் உள்ளிட்ட இந்தியர் தொடர்பான விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.  மெட்ரிக்குலேசன் விவகாரம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக  குலசேகரன் குறிப்பிட்டார்.

மெட்ரிக்குலேசன் விவகாரம் தொடர்பில் அடுத்த புதன்கிழமை நடக்கவிருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர், கல்வி அமைச்சருடன்  விவாதிக்கவிருக்கிறோம். ஆகையால், அமைச்சரவை கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மெட்ரிக்குலேசன் விவகாரம் தொடர்பில்  அனைவரும்  பொறுமையாக இருக்கும்படியும் இதற்கு  விரைவில் நல்ல தீர்வு பிறக்கும் என்றும் அமைச்சர் குலசேகரன் தெரிவித்தார்.

Comments