ரந்தாவ் இடைத்தேர்தல்!இந்தியர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் சிலாங்கூர் தொழில்திறன் மையங்கள் தலைவர் ஐயப்பன் முனியாண்டி வலியுறுத்து

ரந்தாவ் இடைத்தேர்தல்!இந்தியர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்
சிலாங்கூர் தொழில்திறன் மையங்கள் தலைவர் ஐயப்பன் முனியாண்டி வலியுறுத்து

        ஆதிரன்

கிள்ளான், ஏப்ரல் 12- ரந்தாவ் இடைத்தேர்தலில் இந்தியர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று   சிலாங்கூர் தொழில்திறன் மையங்கள் தலைவர் ஐயப்பன் முனியாண்டி வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மக்கள் பல எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கும் நிலையில் யாருக்கு வாக்களித்தால் ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை உணர்ந்து இந்தியர்கள் வாக்களிக்க வேண்டும் என்று ஐயப்பன் முனியாண்டி கேட்டுக் கொண்டார்.

இந்தியர்கள் அரசாங்கத்தை நம்பி வாழ்க்கை நடத்தவில்லை. அவர்கள் சொந்த சம்பாத்தியத்தில்தான் வாழ்ந்து வருகின்றனர். எனினும் கடமை என்று வரும் போது அதனை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு இந்தியர்களுக்கு உண்டு.

ஆட்சி மாற்றத்தில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் சரியான  தடத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்தியர்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார் ஐயப்பன் முனியாண்டி.

ஒரு சில கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடி சூழலுக்கு ஏற்ப முடிவு செய்கின்றனர். சமுதாயம் குறித்து துளியும் கவலைப்படுவதில்லை.   இந்தியர் ஓட்டு ஒரு வேட்பாளரின் வெற்றியை நிர்ணயிக்கக்கூடியது என்பதை ரந்தாவ் இடைத்தேர்தலில் இந்திய வாக்காளர்கள் நிர்ணயிக்க வேண்டும்.

இந்நாட்டில் சிறுபான்மை இனமான இந்தியர்களும் சக்தி படைத்தவர்கள் என்பதை காட்ட வேண்டும். சமுதாயத்தை அணைக்கும் தலைவர்களை அரவணைக்க வேண்டும். ஆகையால், ரந்தாவ் இடைத்தேர்தலில் இந்திய வாக்காளர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் ஐயப்பன் முனியாண்டி கேட்டுக் கொண்டார்.

Comments