சிம்பாங் அம்பாட் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் தேவஸ்தானத்தில் தமிழில் அர்ச்சனை

சிம்பாங் அம்பாட் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் தேவஸ்தானத்தில் தமிழில் அர்ச்சனை

மு.வ.கலைமணி

பினாங்கு, ஏப்ரல் 18-
தென் செபராங் பிறை, சிம்பாங் அம்பாட் நகரில் குடிகொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் தேவஸ்தானத்தில், தமிழ் புத்தாண்டு முதல் தமிழில் மந்திரம் ஓதி அர்ச்சனைகள் செய்யப்பட்டன.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

ஆலய நிர்வாகக்க குழுவின் தீவிர  முயற்சியின் பயனாக தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டன.
தேவஸ்தான பிரதான தலைமை குருக்கள் சிவஸ்ரீ முத்து குமார் சிவச்சாரியார்  புத்தாண்டு தொடக்க பூசையில்,  தமிழில் மந்திரம் ஓதி வருகை தந்திருந்த திரளான பக்தர்களை பூரிப்படைய செய்தார்.

மொழியின் இனிமையை மந்திரம் வழி, பக்தர்கள்  பக்தி பரவசம் அடையும் வகையில் ஓதி நிர்வாகத்தினரின் பாராட்டைப் பெற்றார்.
நட்சத்திர ராசிப்பலன் வாசிக்கப்பட்டது.
தொடர்ந்து தமிழில் அர்ச்சனைகள்  செய்த பக்த பெருமக்கள் பெரும் வரவேற்பை வழங்கினர்.

பக்தர்களுக்கு சுவையான அன்னதானமத்தை திரு. விஜயன் குடும்பத்தினரால் வழங்கப்பட்டது. மலேசியத் திருத்தலங்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் வழக்கம் தொடர வேண்டும் என தேவஸ்தான தலைவர் கலைமணி கேட்டுக் கொண்டார்.

130 ஆண்டுகால பழமையான ஆலயமான இவ்வாலய வரலாற்றில் தமிழில் அர்ச்சனைகள் மேற்கொள்வது இதுவே முதல் முறை என அவர் மேலும் தெரிவித்தார்.

Comments