எஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா? மித்ராவை அணுகலாம்

எஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா?
மித்ராவை அணுகலாம்

குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஏப்ரல் 16-
எஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பலவேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் செயல்படும் மித்ரா சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.

இந்திய மாணவர்கள் பலர் தகுதி இருந்தும் மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காதது கண்டு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்த மெட்ரிக்குலேசன் பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று பல மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி வழி கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் இந்திய மாணவர்களின் குமுறல்கள் குறித்து தகவலறிந்த பிரதமர். துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மித்ரா வழி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.

மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மித்ரா அமைப்பை தகுந்த ஆவணங்களுடன் விரைந்து படத்தில் காணும் எண்ணில் தொடர்பு கொள்வதன் வழி மித்ரா அதிகாரிகள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று மித்ரா அறிவித்துள்ளது.


இந்த மெட்ரிக்குலேசன் பிரச்சினைக்கு நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் தீர்வு காண வேண்டும் என்பது இந்தியர்களின் கோரிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

  1. Why pakatan harapan too doing the something towards public

    ReplyDelete

Post a Comment