செடிக் மானியம் கேட்டும் எங்களுக்கு கிடைக்கவில்லை! வேண்டியவர்களுக்கு கதவை தட்டியது தேசம் குணாளன் மணியம் குற்றச்சாட்டு

செடிக் மானியம் கேட்டும் எங்களுக்கு கிடைக்கவில்லை!
வேண்டியவர்களுக்கு கதவை தட்டியது
தேசம் குணாளன் மணியம் குற்றச்சாட்டு

          மித்ரன்

கோலாலம்பூர், ஏப்ரல் 17-
மலேசிய இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக தேசிய முன்னனி அரசாங்கம் செடிக் வழி வழங்கிய கோடிக்கணக்கான மானியம் கேட்டும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று தேசம் ஊடக தோற்றுநர் குணாளன் மணியம் குற்றஞ்சாட்டியுள்ளார்..

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இந்த செடிக் மானியம்  அதிகாரத்தில் இருந்தவர்களுக்கும் வேண்டியவர்களுக்கும் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தன்னைப் போல ஊடகம் வழி மக்களுக்கு சேவையாற்ற நினைத்தவர்களுக்கு கேட்டும் கிடைக்கவில்லை என்று ஊடகத் துறையில் 28 ஆண்டுகள் அனுபவம் கொண்டுள்ள தேசம் வலைத்தள ஊடகத்தின் தலைமை ஆசிரியருமான குணாளன் மணியம் வருத்தம் தெரிவித்தார்.

மலேசிய இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக முந்தைய தேசிய முன்னனி அரசாங்கம் செடிக் வழி வழங்கிய பல கோடி வெள்ளி மானியம் சொந்த பயன்பாட்டிற்கும் சொத்து வாங்கவும் பயன்படுத்தப்பட்டதாக நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் கீழ் அமைச்சர் வேதமூர்த்தியின்  தலைமையில் மித்ரா எனப்படும் இந்தியர் உருமாற்றப் பிரிவின் தலைமை இயக்குநர் எஸ்.லட்சுமணன் எம்ஏசிசி- காவல் துறையில் புகார் செய்யப்பட்டுள்ளதாக கூறியிருந்தது தொடர்பில் குணாளன் மணியம் அவ்வாறு கருத்துரைத்தார்.

இந்த மானியம் 800 அரசு சாரா இயக்கங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. போலி ஆவணங்கள், போலி முகவரியை  கொடுத்தவர்களுக்கு அந்த மானியம் கிடைத்துள்ளது. ஆனால், மக்கள் நலன் கருதி உண்மையான ஊடக சேவையை வழங்கி வரும் எங்களுக்கு கேட்டும்  வழங்கப்படவில்லை. இதில் அதிகாரத்தில் இருந்தவர்களை பலமுறை நேரில் சந்தித்தும் தொலைபேசி வழியும் கேட்டிருந்தேன்.

"கவலைப்படாதீர்கள், பரீசிலனையில் உள்ளது. கண்டிப்பாக தருகிறோம். நீங்கள் பல ஆண்டுகாலமாக ஊடகத் துறையில் சேவையாற்றி வருகிறீர்கள். கடந்த 8 ஆண்டுகளாக தேசம் வழி மக்களுக்கு சேவையாற்றி வருகிறீர்கள். கண்டிப்பாக உதவுகிறோம்" என்று வாக்குறுதி வழங்கியவர்கள் இன்று காணாமல் போய்விட்டார்கள் என்றார் குணாளன் மணியம்.

இந்த மானியத்தை பெற்ற நூற்றுக்கணக்கான இயக்கங்களின் பெயர்கள் கண்ணில் தென்பட்டது. அந்தப் பட்டியலைப் பார்த்த போது மனம் வருந்தியது. யார் யாரோ மானியம் பெற்றிருக்கிறார்கள். எல்லாம் அவர்களுக்கு வேண்டியவர்கள். ஆனால், என்னை போன்ற உண்மையான ஊடக சேவையாளர்களுக்கு செடிக் மானியம் வழங்கப்படாதது வருத்தமே. இதில் யாரை சாடி என்ன பயன் என்று குணாளன் மணியம் கவலையோடு குறிப்பிட்டார்.

Comments