மலேசியத் தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள், சீக்கியர்கள் அனைவரும் ஒன்றுபட்டு புத்தாண்டை கொண்டாடுவோம்!

மலேசியத் தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள், சீக்கியர்கள் அனைவரும் ஒன்றுபட்டு புத்தாண்டை கொண்டாடுவோம்!

கோலாலம்பூர்,ஏப்ரல் 13-
மலேசியத் தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள், சீக்கியர்கள் அனைவரும் ஒன்றுபட்டு சித்திரை, விஷு, உகாதி, வைசாக்கி புத்தாண்டை கொண்டாடுவோம் என்று சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் பிரதமர் துறை
அமைச்சர் பொன். வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இந்த புத்தாண்டுகள் தத்தம் இனத்தவர்கள் கொண்டாடும் புத்தாண்டாக இருந்தாலும்  ஒன்றுபட்டு கொண்டாடுவது ஒற்றுமையை ஏற்படுத்தும். இந்த ஒற்றுமை இன ஒற்றுமையை மேம்படுத்தும் என்று அமைச்சர் வேதமூர்த்தி தெரிவித்தார்.

இந்த சித்திரைப் புத்தாண்டு கொண்டாடப்படும் அதேவேளையில் விஷு, உகாதி, வைசாக்கி புத்தாண்டும் கொண்டாடப்படுகிறது. இந்த வேளையில் அனைவருக்கும் உகாதி, விஷு, வைசாக்கிப்  புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேவேளையில் மலேசியவாழ் இந்துப் பெருமக்கள் அனைவருக்கும் சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டார்.

Comments