பல்லீன மக்களோடு சுபீட்சமான வாழ்க்கைக்கும் சமுதாய மேம்பாட்டிற்கும் வித்திடுவோம்!ஒற்றுமை துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெலுங்குப் புத்தாண்டு வாழ்த்து!

பல்லீன மக்களோடு சுபீட்சமான வாழ்க்கைக்கும் சமுதாய மேம்பாட்டிற்கும் வித்திடுவோம்!ஒற்றுமை துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெலுங்குப் புத்தாண்டு வாழ்த்து!

கோலாலம்பூர், ஏப்ரல் 6- மலேசிய நாட்டில் வாழும் பல்லீன மக்களோடு இணைந்து சுபீட்சமான வாழ்வுக்கு வித்திடுவோம் என்று பிரதமர் துறையின் ஒற்றுமை துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இந்த நாட்டில் இந்தியர்கள் நெடுங்காலமாக ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவின் தமிழ்நாடு, ஆந்திரா, கேரள மாநிலங்களில் அப்போதைய மலாயாவில் தோட்டங்களில் குடியேற்றப்பட்ட காலம் தொட்டு "இந்தியர்கள்" என்று ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்து வந்திருக்குறோம். இந்நிலையில் தத்தம் மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு சார்ந்த நடவடிக்கைகளையும் நாம் கொண்டாடி மகிழ்ந்து வருகிறோம். அந்த வகையில் தெலுங்கு மக்கள் கொண்டாடும் "உகாதி" பண்டிகை சிறப்புமிக்க ஒன்றாகும் என்று வேதமூர்த்தி தெரிவித்தார்.

 மலேசிய வாழ் தெலுங்கு மக்கள் அனைவரும் மற்ற இனங்களுடன்  மகிழ்ச்சியாக உகாதி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்த நன்னாளில் சுபிட்சமான வாழ்வையும் வளமான எதிர்காலத்தையும் தெலுங்கு சமுதாயம் பெற்றிடவும் இன இணக்கத்திற்கு  துணை நிற்கவும் இந்த வேளையில் கேட்டுக் கொள்கிறேன் என்றார் அமைச்சர் வேதமூர்த்தி.

நாம் அனைவரும் இந்தியர் என்ற அடிப்படையில் சமுதாய முன்னேற்றத்திற்கு பாடுபடுவோம் என்று கேட்டுக் கொண்ட அமைச்சர் பொன்.வேதமூர்த்தி, பிரதமர் துறையின் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக  அமைச்சகத்தின் சார்பில் தெலுங்கு வாழ் மக்கள் அனைவருக்கும் உகாதி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

Comments