பாரம்பரிய-பண்பாட்டு விழாக்கள் தேசிய ஒற்றுமைக்கு வலு சேர்க்கின்றன -அமைச்சர் பொன்.வேதமூர்த்தி.

பாரம்பரிய-பண்பாட்டு விழாக்கள் தேசிய ஒற்றுமைக்கு வலு சேர்க்கின்றன
   -அமைச்சர் பொன்.வேதமூர்த்தி.

தென்னவன்

கங்கார், ஏப்ரல் 22-
பன்முகத் தன்மை கொண்ட மலேசியா பல இன சமுதாயத்தில் பாரம்பரிய நிகழ்ச்சிகளும் பண்பாட்டு விழாக்களும் தேசிய ஒற்றுமைக்கு வலு சேர்க்கின்றன என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இதில் குறிப்பாக 'தாய்' மக்கள் என்று அழைக்கப்படும் சயாமிய மக்கள் போன்ற சிறுபான்மை மக்களின் பண்பாட்டு விழாக்களை மற்ற சமூகத்தினரும் தாய் பாரம்பரியம் வழுவாமல் கொண்டாடுவது மலேசியர்களின் தேச ஒற்றுமையைக் காட்டுகிறது என்று பெர்லிஸ், கங்கார், ஜெஜாவிக்கு அருகில் உள்ள வாட் மாச்சி மாப்ராசிட் என்னும் இடத்தில் கொண்டாடப்பட்ட சொங்ரான் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் செய்தியாளர்களிடம் அவ்வாறு சொன்னார்.

தாய் மக்களின் பிரதிநிதி செனட்டர் அக்னான் ஏத்தொக்கும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், சமூக நல்லிணக்கம், தேச ஒற்றுமை குறித்து அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மக்கள் நல்லாதரவு வழங்குகின்றனர் என்றும் பிரதமர் துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி தெரிவித்தார்.

பெர்லிஸ் மாநில சயாமிய நல சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஏப்ரல் 20-ஆம் நாள் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சொங்ரான் திருவிழாவில் 5,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments