இந்திய தூதரகத்தின் ஆதரவில் களும்பாங் மைஸ்கில்ஸ் வளாகத்தில் காந்தி சிலை பூங்கா திறப்பு விழா மனிதவள அமைச்சர் குலசேகரன் திறப்பு விழா செய்கிறார்

இந்திய தூதரகத்தின் ஆதரவில் களும்பாங் மைஸ்கில்ஸ் வளாகத்தில் காந்தி சிலை பூங்கா திறப்பு விழா
மனிதவள அமைச்சர் குலசேகரன் திறப்பு விழா செய்கிறார்

குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஏப்ரல் 24-
இந்திய தூதரகத்தின் ஆதரவில் களும்பாங் மைஸ்கில்ஸ் வளாகத்தில் காந்தி சிலை பூங்காவை
மனிதவள அமைச்சர் குலசேகரன் திறப்பு விழா செய்யவிருப்பதாக மைஸ்கில்ஸ் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

மைஸ்கில்ஸ் அறவாரியம் இலாப நோக்கமற்ற ஓர் அமைப்பு என்பதை யாவரும் அறிவர். இந்தியாவின் சுதந்திரத் தந்தை அண்ணல் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு உலகளவில் ஈராண்டுகள் கொண்டாடப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

மகாந்மா  காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 26 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையில் மைஸ்கில்ஸ் களும்பாங் வளாகத்தில் மைஸ்கில்ஸ் அறவாரியமும் மலேசிய இந்திய தூதரகமும் இணைந்து காந்தி சிலையுடன் கூடிய ஒரு நினைவு பூங்கா ஒன்றை திறப்பு விழா செய்யவிருக்கின்றனர்.

இத்திறப்பு விழாவுக்குப் பிறகு தொடர் நிகழ்வாக 150 மரக்கன்றுகளை மைஸ்கில்ஸ் களும்பாங் வளாகத்தில் நடவிருக்கின்றது. இச்சிறப்பு நிகழ்வுக்கு மனிதவள அமைச்சர் மாண்புமிகு எம்.குலசேகரன் மற்றும் மலேசிய இந்திய தூதரக அதிகாரிகளும் சிறப்பு வருகைப் புரியவிருக்கின்றனர்.

ஆகையால், பெற்றோர்கள், மாணவர்கள், நன்கொடையாளர்கள், ஆதரவாளர்கள், நல்லுள்ளங்கள், அனைவரும் இந்நிகழ்வுக்கு வருகை தரும்படி மைஸ்கில்ஸ் அறவாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

Comments