நாம் யாரைப்பற்றி கவலைப்பட வேண்டும்?ம.இ.காதான் நமது உலகம்! அதனை வலுப்படுத்த பாடுபடுவோம் -டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்

நாம் யாரைப்பற்றி கவலைப்பட வேண்டும்?ம.இ.காதான் நமது உலகம்!
அதனை வலுப்படுத்த பாடுபடுவோம்
-டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் 

குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஏப்ரல் 24-
நாம் யாரைப்பற்றியும்  கவலைப்பட தேவையில்லை. ம.இ.காதான் நமது உலகம். அதனை வலுப்படுத்த பாடுபட்டாலே நமக்கு வெற்றி கிட்டும் என்று
ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் கூறினார்.

நாடு தழுவிய நிலையில் ம.இ.கா உறுப்பினர்களை சீர்படுத்தி அனைத்து கிளை உறுப்பினர்களும் ஒன்றிணைந்து ம.இ.காவை வலுப்படுத்த கரம் கோர்க்க  வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் ஜொகூர் ம.இ.கா தொகுதி, கிளைத் தலைவர்களை சந்தித்த போது டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் அவ்வாறு தெரிவித்தார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

நாம் யாரைப் பற்றியும் கவலை கொள்ளத் தேவையில்லை. நாம் நம்மை பற்றிதான் கவலைப்பட வேண்டும். நாம் ம.இ.காவை கவனிப்போம். ம.இ.கா வழி உறுப்பினர்களையும் நமக்கு ஆதரவு வழங்கும் மக்களையும்  கவனிப்போம் என்று விக்னேஷ்வரன் சொன்னார்.

ம.இ.கா இன்னும் வலுவாகவே இருக்கிறது. யார் என்ன பேசினாலும் நமது நிலை நமக்குத் தெரியும். ம.இ.கா சொத்து ரீதியில் வலுவாகவே இருக்கிறது. ம.இ.கா வர்த்தகம் வழி மேலும் வலுப்பெறும். அதனை நாங்கள் திட்டமிடுகிறோம்.

கிளைத் தலைவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் தங்கள் உறுப்பினர்கள் தத்தம் வட்டாரத்தில் உள்ளவர் என்பதை உறுதி செய்து அவர்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன்.


இந்த சந்திப்பில் கம்பீர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ம.இ.கா நிர்வாகச் செயலாளரும் லெடாங் ம.இ.கா தொகுதித் தலைவருமான டத்தோ  அசோஜன், தெங்காரு சட்டமன்ற உறுப்பினரும் லாபிஸ் தொகுதி தலைவருமான ரவின்குமார் உள்ளிட்ட ஜொகூர் மாநிலத்தை சேர்ந்த ஐந்து தொகுதித் தலைவர்கள், கிளைத் தலைவர்கள், டத்தோ கோபாலகிருஷ்ணன், செனட்டர் டத்தோ ஆனந்தன் ஆகியோருடன் ஜொகூர் ம.இ.காவினர்  பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.Comments