வறுமை கோட்டில் இருக்கும் இந்திய ஏழை குடும்ப பிள்ளைகளுக்கு மைஸ்கில்ஸ் போன்ற கடப்பாடு சமுதாயத்திற்கும் இருக்க வேண்டும் மனிதவள அமைச்சர் குலசேகரன் வேண்டுகோள்

வறுமை கோட்டில் இருக்கும் இந்திய ஏழை குடும்ப பிள்ளைகளுக்கு மைஸ்கில்ஸ் போன்ற கடப்பாடு சமுதாயத்திற்கும் இருக்க வேண்டும்
மனிதவள அமைச்சர் குலசேகரன் வேண்டுகோள்

செய்தியாளர் : குணாளன் மணியம்
படங்கள் : ஜி.முகேஸ்வரன்

களும்பாங் ஏப்ரல் 26- (உலுசிலாங்கூர் )
வறுமை கோட்டில் இருக்கும் இந்திய குடும்பங்களைச் சார்ந்த  பிள்ளைகளுக்கு மைஸ்கில்ஸ் போன்று சமுதாயம் அக்கறை காட்ட வேண்டும் முன் வர வேண்டும் என்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் கூறினார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இந்திய சமுதாயத்தில் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் படித்து பட்டம் பெற்று நல்ல நிலைக்கு வந்து விடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், வறுமை கோட்டில் இருக்கும் 20 விழுக்காடு இந்திய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளை யார் கவனிப்பது என்று குலசேகரன் கேள்வி எழுப்பினார்.

இத்தகைய சூழலில் இருக்கும் பிள்ளைகளை யார் கவனிப்பது  என்ற கேள்விக்கு பதில் மைஸ்கில்ஸ் அறவாரியம். இத்தகைய அமைப்புகள்தான் ஏழை குடும்பம், தனித்து வாழும் தாய்மார்கள், குடி பழக்கத்துக்கு ஆளான குடும்ப பின்னனியை கொண்ட குடும்ப பிள்ளைகளுக்கு இலவசமாக தொழில்திறன் போதித்து வருகின்றனர்.

இந்த தொழில்திறன் மூலம் வழி தெரியாமல் இருக்கும் ஆதரவற்ற மாணவர்களின் எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைப்பதுதான்   சாதனை என்று உலுசிலாங்கூர் களும்பாங்கில் உள்ள மைஸ்கில்ஸ் வளாகத்தில்  மகாத்மா காந்தி  பூங்கா திறப்பு விழாலில் கலந்து கொண்ட பின்னர் தேசம் வளைத்தளத்துக்கு வழங்கிய சிறப்புப் தனிப்பட்ட சந்திப்பில் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான குலசேகரன் சொன்னார்.

மைஸ்கில்ஸ் போன்ற இத்தகைய அமைப்புகளுக்கு அரசாங்கம் கண்டிப்பாக முழு உதவியை வழங்கும். எங்களிடம் நிதியுதவி கேட்டிருக்கிறார்கள். எச்ஆர்டிஎப் மூலம் 15 லட்சம் வெள்ளியை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்கான விண்ணப்பத்தை மைஸ்கில்ஸ் வழங்கியுள்ளது. நாங கள் அதனை முறையாக பரிசீலனை செய்த பின்னரே அந்த நிதியுமவியை வழங்குவோம் என்று அமைச்சர் குலசேகரன் குறிப்பிட்டார்.

Comments