மைஸ்கில்ஸ் அறவாரியம் சமுதாய தேவைக்காக முறையாகவே செயல்படுகிறது பணநோக்கம் என்பதெல்லாம் கட்டுக்கதை - இயக்குநர் வழக்கறிஞர் பசுபதி

மைஸ்கில்ஸ் அறவாரியம் சமுதாய தேவைக்காக முறையாகவே செயல்படுகிறது
பணநோக்கம் என்பதெல்லாம் கட்டுக்கதை
- இயக்குநர் வழக்கறிஞர் பசுபதி

செய்தி: 
குணாளன் மணியம்
படங்கள்: முகேஸ்வரன்

களும்பாங், ஏப்ரல் 27-
மைஸ்கில்ஸ் அறவாரியம் பண நோக்கத்தில் அல்லாமல் சமுதாய தேவைக்காக முறையாகவே செயல்படுகிறது என்று
அதன் இயக்குநர் வழக்கறிஞர் பசுபதி கூறினார்.

அரசாங்கம் மைஸ்கில்ஸ் அறவாரியத்திற்கு கோடிக்கணக்கில் பணம் கிடைக்கிறது.  இவர்கள் அதனை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று ஒரு சிலர் சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புகின்றனர்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

அதில் துளியளவும் உண்மையில்லை. அரசாங்கம் எங்களுக்கு வரிவி்லக்கு வழங்கியுள்ளது. வருமான வரி வாரியம் எங்கள் கணக்கறிக்கைகளை நேரடியாக கண்காணிக்கும் பட்சத்தில் நாங்கள் எப்படி அதனை தவறாக பயன்படுத்த முடியும் என்று வழக்கறிஞர் பசுபதி கேள்வி எழுப்பினார்.

அரசாங்கம் வழங்கும் ஒவ்வொரு மானியத்திற்கும் நாங்கள் கணக்கறிக்கை அனுப்ப வேண்டும். அந்த வகையில் செடிக் வழங்கிய மானியத்திற்கும் நாங்கள் கணக்கறிக்கை வழங்கினோம்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மித்ராவில் மூன்று அதிகாரிகள் வந்து கணக்கறிக்கைகளை நேரனியாக பார்த்து மனநிறை கொண்டதாக களும்பாங் மைஸ்கில்ஸ் வளாகத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தியின் பூங்கா சிலை திறப்பு விழா நிகழ்வுக்குப் பிறகு தேசம் வலைத்தளத்திற்கு வழங்கிய சிறப்பு சந்திப்பில் வழக்கறிஞர் பசுபதி அவ்வாறு சொன்னார்.

அரசு சார்பற்ற நிறுவனங்கள் எல்லாம் பணத்தை தவறாக பயன்படுத்துவதாக நினைக்கக் கூடாது. இலாப நோக்கமில்லாத அறவாரியம் மைஸ்கில்ஸ். இது முழுக்க முழுக்க வறுமை கோட்டில் இருக்கும் ஏழை இந்திய குடும்ப பின்னனியைக் கொண்ட பிள்ளைகளுக்கு தொழில்திறன் பயிற்சி வழங்கி அவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டுவதுதான் மைஸ்கில்ஸ் அறவாரியத்தின் நோக்கமாகும் என்று வழக்கறிஞர் பசுபதி திட்டவட்டமாக கூறினார்.

Comments