இளைஞர்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்தில் மலேசிய தல அஜித் ரசிகர் மன்றத்தின் நல்லெண்ண புட்சால் போட்டி மன்றத் தலைவர் தேவேந்திரன் தகவல்

இளைஞர்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்தில் மலேசிய தல அஜித் ரசிகர் மன்றத்தின் நல்லெண்ண புட்சால் போட்டி
மன்றத் தலைவர் தேவேந்திரன் தகவல்

கோலாலம்பூர் ஏப்ரல் 21-
இளைஞர்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்தில் மலேசிய தல அஜித் ரசிகர் மன்றத்தின் ஏற்பாட்டில் நல்லெண்ண புட்சால் போட்டி நடைபெறவிருப்பதாக மன்றத்தின் தலைவர் தேவேந்திரன் கூறினார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

சினிமா வழியும் நல்ல காரியங்களை மேற்கொள்ள முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் மலேசிய தல அஜித் ரசிகர் மன்றம் பல ஆண்டுகளாக ஆக்கரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இளைஞர்களின் கூட்டமைப்பில் அமைக்கப்பட்ட தல அஜித் ரசிகர் மன்றம் பல சேவைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக தேவேந்திரன் தெரிவித்தார்.

அந்த வகையில் மலேசிய தல அஜித் ரசிகர் மன்றம் மூன்றாவது ஆண்டாக  ஏப்ரல் 27 சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு பலாகோங் இண்டோர் புட்சால் அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம். ஒரு அணியில் 8 விளையாட்டாளர்கள் இருக்க வேண்டும். இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் ஏப்ரல் 22 திங்கட்கிழமைக்குள் பெயரை பதிந்து கொள்ள வேண்டும் என்று தேவேந்திரன் சொன்னார்.

இந்த புட்சால் போட்டியில் முதல் நிலை வெற்றி அணிக்கு 800 வெள்ளி பரிசாக வழங்கப்படும். இரண்டாம் நிலை வெற்றியாளருக்கு 600 வெள்ளியும்  மூன்றாவது நிலை வெற்றியாளருக்கு 300 வெள்ளியும் பரிசுத் தொகையும் பதக்கமும் சான்றிதழும் வழங்கப்படவுள்ளன. இந்த புட்சால் போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் 012-2594183 என்ற எண்ணில் தேவேந்திரனை தொடர்பு கொள்ளலாம்.


Comments