ம.இ.கா தலைவர்களை "கொள்ளையர்கள்" என்றவர்களை மக்கள் துரத்தியடிக்கிறார்கள் -டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அதிரடி

ம.இ.கா தலைவர்களை "கொள்ளையர்கள்" என்றவர்களை மக்கள் துரத்தியடிக்கிறார்கள்
-டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அதிரடி

ஈப்போ, ஏப்ரல் 29-
ம.இ.கா தலைவர்களை அன்று கொள்ளையர்கள், பொய்க்காரர்கள் என்று சொன்னவர்களை மக்கள் இன்று துரத்தியடிக்கிறார்கள் என்று ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வர்ணித்துள்ளார்.

ஆளுங்கட்சி இந்தியத் தலைவர்கள் சிலர் ஒரு காலத்தில் ம.இ.கா தலைவர்களை 'திருடர்கள்'  'பொய்க்காரர்கள்' என்று வசை பாடினர். ஆனால்
இன்று நிலைமையென்ன?
இன்றைக்கு இவர்கள் பொய்க்காரர்களாகவும் பித்தலாட்டக்காரர்களா
கவும் அதே  மக்களால் துரத்தி அடிக்கப்படுகிறார்கள் என்று அதனால்தான் டான் விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

மக்கள் நம்பிக்கை  கூட்டணி கட்சிக்கு வாக்களிக்க  விரும்பாமல் போனதால்தான்  எல்லா இடைத்தேர்தல்களிலும்  தொடர்ந்துத் தோற்றுக் கொண்டு வருகிறார்கள் என்று சனிக்கிழமை பேராக் , ஈப்போ பாராட் தொகுதியின் செயலக அறையைத் துவக்கி வைத்து பேசும் போது விக்னேஷ்வரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மைக்காவைப் பற்றி பேசும்  போதெல்லாம ம.இ.காவை இன்றைய ஆளுங்கட்சியினர்
குற்றஞ்சாட்டினர்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இவர்கள் பல உண்மைகளை அறியாமல் பேசுவதுண்டு. மைக்காவை ஆரம்பித்ததுதான் ம.இ.கா. ஆனால் அதை வழி நடத்தியவர்கள் டான்ஸ்ரீ செல்வராஜா, டி.பி. விஜேந்திரன், டான்ஸ்ரீ ராமஜயர், டான்ஸ்ரீ அம்பிகைபாகன், டத்தோ தம்பிராஜா போன்ற மெத்தப் படித்த மேதைகள்தான். இவர்கள் மீதெல்லாம் இன்றைக்கு ஆட்சியில் அமர்ந்து அமைச்சர்களாக இருப்பவர்கள் ஏன் புகார் செய்யவில்லை?

அதேபோன்று  தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தை ஆரம்பித்தது ம.இ.காவின் முன்னாள் தலைவர் துன் சம்பந்தன். அன்றைக்கு நடந்த தோட்டத் துண்டாடலில் சிக்கித் தவித்த மக்களுக்காக துண்டாடலை முறியடிக்க
வேண்டி துன் சம்பந்தன் கண்ட கூட்டுற சங்கத்தை இன்று ம.இ.கா வா  வழி நடத்துகிறது?

அதேபோன்று டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் ம.இ.கா தலைவராகயிருந்த போது நேசாவைத் தொடங்கி ,மக்களுக்கான வீடமைப்புத் திட்டங்களில் பங்குப்பெற முனைந்தார். இன்று அதன் நிலையென்ன? அதை ம.இ.காவா இன்று வழி நடத்துகிறது?

இப்படி எத்தனையோ திட்டங்களைக் கடந்த 60 ஆண்டுகளில் ம.இ.கா தொடங்கி மக்களுக்கான முதல் கட்டப்பணிகளைத் தொடங்கினாலும்,
இன்று அவற்றை வழி நடத்திக் கொண்டிருப்பவர்கள் யாரோ? எவரோ,? ஆனால், அவற்றில் தவறுகள் ஏற்படும் பட்சத்தில் எடுத்த எடுப்பிலேயே  ம.இ.காவைக் இப்படிக் குறைச் சொல்லி வந்தவர்கள்தானே இப்போது ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்?

அன்று குற்றம் சொல்லி வந்தவர்கள் இன்று எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? ஆட்சிக்கு வந்து ஒரு வருடமாகிவிட்டது. அன்று ம.இ.கா மீது குற்றஞ்சொல்லியவர்கள் மீதுதான் இன்று மக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள்,

அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாமல் பல அமைச்சர்கள் ஓடி ஒளிந்துக்
கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மக்கள் குரலுக்குச்
செவிச்சாய்க்காமல் அலறுகிறார்கள். அவர்களின் செயலாளர்களும் அரண்டுப்போய் இருக்கிறார்கள்.

இப்போது அவர்களுக்கு உண்மை நிலை என்ன என்று தெரியும். எதிர்க்கட்சியாக இருந்த போது, கத்திய அந்த சத்தமெல்லாம், இப்போது, ஆளுங்கட்சியானதால் அப்படிக் கத்தமுடியாதென்று. காரணம் மக்கள் இவர்களின் குறைகளைக் கண்டுப்பிடித்து கத்தவேண்டிய இடத்தில் இருக்கிறார்கள்,

அதனால்தான் "ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்; வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்" என்ற உண்மையை ஓராண்டு அனுபவத்தில் இப்போது இவர்கள் உணர்ந்திருப்பார்கள்.

பேராக்கில் ம.இ.கா போராடிப் பெற்ற 2,000 ஏக்கர் நிலத்தில்
செம்பனை மரங்களைப் பயிரிட்டு, அந்த நிலத்தை 1 கோடியே 50  வெள்ளிக்கு சீர்படுத்தித் தோட்டமாக வடிவமைத்து, அந்த கடன்களை அடைத்தப்பிறகு
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உதவிட ம.இ.கா திட்டம் வகுத்திருக்கும் போதுதான் அதில் பங்குப் போடவும், துண்டாவும் இன்றைய ஆட்சியர்கள் சிலர் திட்டம் போட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஒரு பகிரங்க வேண்டுகோள்? அதாவது இந்த ஆட்சியிலும் 2,000 ஆயிரம் ஏக்கர் நிலத்தைக் கொண்டு வாருங்கள் இணைந்தே செயல்படுவோம்   என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் நம்பிக்கை கூட்டணி தலைவர்களுக்குச்  சவால் விடுத்தார்.

Comments