கல்வியில் நாட்டமில்லாத இந்திய மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது மைஸ்கில்ஸ் - வழக்கறிஞர் பசுபதி

கல்வியில் நாட்டமில்லாத இந்திய மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது மைஸ்கில்ஸ்
- வழக்கறிஞர் பசுபதி

முகேஸ்வரன் குணாளன்

களும்பாங், ஏப்ரல் 28-
கல்வியில் நாட்டமில்லாத, பின் தங்கிய மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டதான் மைஸ்கில்ஸ் அறவாரியம் என்று அதன் இயக்குநர் வழக்கறிஞர் பசுபதி கூறினார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இந்நாட்டில் வறுமை கோட்டில் இருக்கும் 20 விழுக்காடு அடிமட்ட ஏழை இந்திய குடும்பத்தைச் சேர்ந்த எத்தனையோ மாணவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகியுள்ளது. குடிப்பழக்கத்து ஆளான தந்தையால் அந்த குடும்பம் பரிதவிக்கும் நிலையில் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது என்று பசுபதி தெரிவித்தார்.

இத்தகைய மாணவர்களின் எதிர்காலத்திற்கு அடித்தளம் வழங்கும் வகையில் மைஸ்கில்ஸ் அறவாரியம் பல்வேறு தொழில்திறன் பயிற்சிகளை இந்த மையத்தில் வழங்கி வருகிறது. இதற்காகவே 34 ஏக்கரில் மைஸ்கில்ஸ் கல்லூரி வளாகம் இமைக்கப்பட்டுள்ளது என்றார் பசுபதி.

இந்த மைஸ்கில்ஸ் கல்லூரி வளாகத்தில் வயரிங் பயிற்சி, பேக்கரி பயிற்சி உள்ளிட்ட பல பயிற்சிகள் மைஸ்கில்ஸ் கல்லூரி வழங்கி வருகிறது. இதில் மொத்தம் 200 மாணவர்கள் தொழில்திறன் பயிற்சி பெற்று வருகின்றனர். எங்களுக்கு பல நிறுவனங்கள் இனம் பாராமல் உதவி வழங்கி வருவதாக பசுபதி சொன்னார்.

மைஸ்கில்ஸ் கல்லூரிக்கு இன்னும் பல லட்சம் வெள்ளி நிதி தேவைப்படுகிறது. எங்கள் தேவையை அமைச்சர் குலசேகரனிடம் தெரிவித்த போது மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் எச்ஆர்டிஎப் மூலம் 15 லட்சம் வெள்ளி வழங்க அவர் முன்வந்துள்ளார். அதேநேரத்தில்

கல்லூரியை நடத்துவதற்கு மாதம் ஒரு லட்சம் வெள்ளி தேவைப்படுகிறது.  இங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு அரசாங்கம் வழங்கும் சம்பளத்தை வழங்குகிறோம்.

இபிஎப், சொக்சோ வழங்குகிறோம். எங்களை எப்படி தவறான கண்ணோட்டத்தில் பார்க்க முடியும்?

இந்திய சமுதாயம் எங்கள் சேவைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சமுதாய நோக்கத்தில் செயல்படும் எங்களின் முயற்சிக்கு அனைவரும் கைகொடுக்க  வேண்டும் என்று பசுபதி கேட்டுக் கொண்டார்.


Comments