மலேசியத் தமிழர்களின் வாழ்வில் இனிமையும் மகிழ்ச்சியும் செழிக்கட்டும்! டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் சித்திரைப் புத்தாண்டு

மலேசியத் தமிழர்களின் வாழ்வில் இனிமையும் மகிழ்ச்சியும் செழிக்கட்டும்!
டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் சித்திரைப் புத்தாண்டு

கோலாலம்பூர், ஏப்ரல் 13-
மலேசியத் தமிழர்களின் வாழ்வில் இனிமையும் மகிழ்ச்சியும் செல்வமும் செழிக்கட்டும் என்று ம.இ.கா தேசியத் தலைவர்
டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

இந்நாட்டில் ஒவ்வோர் சமூகமும் அந்தந்த காலகட்டத்தில் அவரவர் புத்தாண்டு கொண்டாட்டங்களை கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலில் அனைவரது நோக்கம், இலக்கு காலத்தை ஒட்டிய ஒன்றாக ஒன்றுபட்டதாகவே இருக்கும். அந்த வகையில் விகாரி சித்திரைப் புத்தாண்டு அனைவருக்கும் நன்மையை கொண்டு வரக்கூடியதாக அமையும் என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் கூறினார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

புத்தாண்டு என்றாலே புத்துணர்ச்சி, புதுதெம்பு, புதுப்பொலிவு, புது உத்வேகம் ஏற்படும். இனங்களுக்கு இடையில் கொண்டாட்டங்கள் மாறுபட்டிருந்தாலும் இலக்கு ஒன்றாகவே அமைந்திருக்கும். ஒவ்வொருவரும் புத்தாண்டில் புதிய தீர்மானத்தை வகுத்து அதன்படி செயல்படுவார்கள். இந்த சித்திரைப் புத்தாண்டு தமிழர்களுக்கு புதிய சகாப்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்வதாக டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் சொன்னார்.

இந்த சித்திரைப் புத்தாண்டில் தமிழர்கள் வளமிக்கவர்களாக மற்ற இனங்களுடன் வாழ்வதற்கு உரிய அடித்தளத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதேநேரத்தில் பல்லின மக்களுடன் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற சிந்தனையைக் கொண்டிருக்க வேண்டும்.

தமிழர்கள் அடியெடுத்து வைத்திருக்கும் சித்திரைப் புத்தாண்டு   அனைவருக்கும் முன்னேற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் கேட்டுக் கொண்டார்.

இந்த வேளையில் தமிழர்கள் அனைவருக்கும் சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் ஏப்ரல் 15 திங்கட்கிழமை விஷு புத்தாண்டை கொண்டாடும் மலையாள சமூகத்தினருக்கும் விஷு புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

Comments