அக்னி தேவதையாக அருள் காட்சி தந்து பக்தர்களை பக்தி பரவசமடைய செய்தார் ஸ்ரீ மீனாட்சி அம்மன்

அக்னி தேவதையாக அருள் காட்சி தந்து பக்தர்களை பக்தி பரவசமடைய செய்தார் ஸ்ரீ மீனாட்சி அம்மன்

மு.வ.கலைமணி.

பினாங்கு, ஏப்ரல் 20-
தென் செபராங் பிறை, சிம்பாங் அம்பாட் நகரில்  130 ஆண்டு கால பழமையான ஆலயமான அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் தேவஸ்தானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று,  முகூர்த்தக் கால் ஊன்றும் வைபவத்திற்குப் பிறகு நடத்தப்பட்ட மகாயாக பூஜையில்  அக்னி   வளர்ப்பின் போது  சுமார் 4 அடிக்கு மேல் தீ  பிம்பம் பாய தொடங்கியது .
அதன் பிறகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் அக்னி தேவதையாக அருள் காட்சி தந்தார்.

இக்காட்சி புகைப்படத்தில் தெளிவாக பதிவாகியுள்ளதை அறிந்த உபயகாரர்கள் ஆனந்த கண்ணீர் வடித்து அம்பாளின் அருளைப் போற்றி புகழ்ந்தனர். நிர்வாகத்தினர், குருக்கள் மற்றும் பக்தர்கள் ஆகியோர் உளமாற  அம்பாளை வேண்டி ஆராதனைகள் செய்தனர்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இதனை கேள்வியுற்ற பலநூறு  பக்தர்கள் தங்களின் குழுவினர்களுக்கு புலனம் மற்றும் முகநூல் மூலம் பதிவு செய்து,  அம்பாளின் அருள் காட்சியை பகிர்ந்தனர்.

அதனோடு மறுநாள் நடந்தேறிய திருக்கல்யாண வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அணிதிரண்டு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் அருட்பிரட்சாதம்  பெற்றதோடு
அக்னி தேவதையை போற்றிப் புகழ்ந்தனர்.

ஆகம முறைப்படி எல்லா  காரியங்களும் நேர்த்தியாக நடத்தப்பட்டு வருகின்றப்படியால்  அம்பாள் ஆனந்த நர்த்தனமாடியிருப்பதாக  நிர்வாகத்தினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

Comments