அன்பும் பண்பும் நிறைந்த மனிதநேய உறவை வளர்ப்போம்! ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் உகாதி புத்தாண்டு வாழ்த்து

அன்பும் பண்பும் நிறைந்த மனிதநேய உறவை வளர்ப்போம்!
ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் உகாதி புத்தாண்டு வாழ்த்து

கோலாலம்பூர், ஏப்ரல் 5-
அன்பும் பண்பும் நிறைந்த மனிதநேய உறவை வளர்த்து இந்தியர் என்ற ஒரேகுடையின் கீழ் ஒற்றுமையாய் ஒன்றிணைவோம் என்று  ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தமது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை பூர்வீகமாக கொண்ட மக்கள் பன்னெடுங்காலமாக இந்நாட்டில் வாழ்த்து வருகிறார்கள். அந்த வகையில் இந்தியா, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பூர்வீகமாகக் கொண்ட தெலுங்கர்கள் மற்ற மொழி பேசும் இனங்களுக்கு ஈடாக மலேசியாவில் வாழ்ந்து வருகின்றனர். தங்கள் கலை, கலாச்சாரத்தை இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர்.

இந்த நாட்டில் இந்தியர்கள் அனைவரும் பல மொழி பேசுபவர்களாக இருந்தாலும் அனைவரும் "இந்தியர்கள்" என்ற அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும். நாம் ஒரே குடும்பமாக, பாசமும் நேசமும் காட்டி, பரந்த, விரிந்த மனப்பான்மையுடன் ஒற்றுமையாக வாழும் சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டுள்ளோம். இந்த உகாதிப் புத்தாண்டை தெலுங்கர்கள் மட்டுமன்றி அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாட வேண்டும் என்று மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.

ம.இ.காவின் தொடக்க காலம் முதல் அரசியல், சமூக ரீதியாக தெலுங்கர்கள் அதன் மேம்பாட்டிற்கு சிறந்த சேவையும் பங்களிப்பும் உழைப்பும் வழங்கியுள்ளனர். ம.இ.காவிற்கு தெலுங்கு மக்கள் இதே ஒத்துழைப்பையும் ஆதரவையும்  தொடர்ந்த வழங்க வேண்டும். இதன்வழி இந்தியர்களாகிய நாம் அனைவரும் வளம் பெற்று உயர வேண்டும். இந்த உகாதி புத்தாண்டில் தெலுங்கு மக்கள் மற்ற இன மக்களோடு இணைந்து உயர வேண்டும் என்பதை கொள்கையாக கொள்ள வேண்டும். இந்த வேளையில் மலேசிய தெலுங்கு மக்கள் அனைவருக்கும் மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் தமது உகாதி புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

Comments